ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இங்கெல்லாம் மின்தடை ஏற்படும்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இங்கெல்லாம் மின்தடை ஏற்படும்

மின்தடை

மின்தடை

Thanjavur District | தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகிற 19ஆம் தேதி (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்களை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகிற 19ஆம் தேதி, சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் காரமாக மின்வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் பற்றிய விவரங்களை தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தஞ்சை நகர துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே அண்ணாநகர் மின்பாதையில் இருந்து மின் வினியோகம் பெறும் அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர் ஆகிய பகுதிகளிலும், மேரீஸ் கார்னர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் திருச்சி சாலை, வ.உ.சி. நகர், பூக்கார தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம் ஆகிய பகுதிகளிலும் மின் வினியோம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : விழுப்புரம் மாவட்டத்தில் ஓர் குற்றால அருவி... அது எங்கிருக்கிறது, அங்கே எப்படி செல்வது?

இதேபோல, மங்களபுரம் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ. நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து மின்வினியோகம் பெறும் எஸ்.இ. ஆபிஸ், கலெக்டர் பங்களா சாலை, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ் போஸ் நகர், தென்றல் நகர், துளசியா புரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அவ்வாறே, நிர்மலா நகர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நட்சத்திராநகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர் ஆகிய பகுதிகளிலும், யாகப்பாநகர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் யாகப்பா நகர், அருளானந்த அம்மாள்நகர், குழந்தைஏசு கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள வணிக வளாகம் பகுதிகளிலும் சனிக்கிழமை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur