ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு - இதில் உங்க ஏரியா இருக்கா?

தஞ்சாவூரில் நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு - இதில் உங்க ஏரியா இருக்கா?

தஞ்சாவூரில் மின்தடை பகுதிகள்

தஞ்சாவூரில் மின்தடை பகுதிகள்

Thanjavur News | தஞ்சாவூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் நாளை (நவம்பர் 16) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிபல் காலனி, புதிய பஸ் நிலையம் பகுதிகள், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், கரூப்ஸ் நகர் நூற்பாலை, மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், மேலவஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, ஆலக்குடி, மானோஜிபட்டி, ரெட்டிபாளையம் ரோடு, சிங்கப்பெருமாள்குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.

Must Read :அழகு... அற்புதம் - கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்களின் லிஸ்ட்!

இதேபோல, திருக்காட்டுப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறு உள்ளது. எனவே, இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும் என திருவையாறு உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துளளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, திருக்காட்டுப்பள்ளி, பழமாநேரி, கச்சமங்கலம், இளங்காடு, மாரனேரி, சுக்காம்பார், திருச்சென்னம்பூண்டி, கோவிலடி, நாகாச்சி, பூண்டி, வடுககுடி, வரகூர், கண்டமங்கலம், விஷ்ணம்பேட்டை, கூத்தூர், மகாராஜபுரம், சாத்தனூர், வளப்பக்குடி, ஐம்பதுமேல் நகரம், கடம்பங்குடி, நடுக்காவேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur