ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் தபால் காப்பீடு திட்ட சிறப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க

தஞ்சாவூரில் தபால் காப்பீடு திட்ட சிறப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க

தபால் காப்பீடு திட்டம்

தபால் காப்பீடு திட்டம்

Thanjavur News | தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தபால் கோட்டத்திற்கு உட்பட்ட தலைைமை, துணை மற்றும் கிளை தபால் நிலையங்களில் காப்பீடு திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டத்தில் தபால் காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நாளை தொடங்க இருப்பதாக பட்டுக்கோட்டை கோட்ட தபால் கண்காணிப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

பட்டுக்கோட்டை தபால் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தலைைம, துணை மற்றும் கிளை தபால் நிலையங்களில் தபால் ஆயுள் காப்பீடு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நாளையும் (நவம்பர் 9 ஆம் தேதி), நாளை மறுநாளும்(வியாழக் கிழமை) மற்றும் 23ஆம் தேதி (புதன்கிழமை), 24ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆகிய நாட்களில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் ஆயுள் காப்பீடு திட்டமானது மத்திய அரசு நேரடியாக தபால் துறை மூலம் நடத்தும் திட்டமாகும். இதில் குறைவான பிரீமியம் வசூலிக்கப்பட்டு அதிகமான போனஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பதிவு பெற்ற நிறுவன ஊழியர்கள், நிகர்நிலை பல்கலைக்கழக ஊழியர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்கள், தேசிய பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்ட கம்பெனி ஊழியர்கள், மருத்துவர்கள், என்ஜினீயர்கள், மென்பொருள் வல்லுநர்கள் சேரலாம்.

மேலும், பாராமெடிக்கல் துறை சார்ந்தவர்கள், மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள், பேராசிரியர்கள், தணிக்கையாளர்கள், தொழில்சார்ந்த அனைத்து பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ, ஐ.டி.ஐ. முடித்தவர்களும் சேரலாம்.

Must Read :திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

கிராமிய தபால் ஆயுள் காப்பீடு தி்ட்டத்தில் கிராமத்தில் உள்ள தகுதி வாய்ந்த மக்கள் அனைவரும் சேரலாம். பிரீமிய தொகை மற்றும் முதிர்வு தொகைக்கு முழுமையான வரிவிலக்கு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதேபோல வெளியிடப்பட்டள்ள மற்றொரு அறிவிப்பில், பட்டுக்கோட்டை கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை தபால் அலுவலகங்களில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14ஆம் தேதி வரை செல்வமகள் மற்றும் செல்வமகன் சேமிப்பு கணக்குள் தொடங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாகவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்திலும், ஆண் குழந்தைகளுக்கு செல்வமகன் சேமிப்பு திட்டத்திலும் கணக்கினை அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் தொடங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Postal insurance, Thanjavur