முகப்பு /தஞ்சாவூர் /

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

X
தஞ்சையில்

தஞ்சையில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Thanjavur News | NFPE-GDS மற்றும் அஞ்சல் துறையை சேர்ந்த ஊழியர்கள்  25க்கும் மேற்பட்டோர் தஞ்சையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் P3, P4 மற்றும் GDS ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE சம்மேளன முதற்கட்ட அறைகூவல் ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர். NFPE- கோட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த அறைகூவல் ஆர்ப்பாட்டத்தில் நாளுக்கு நாள் கூடும் வேலைப்பளு, நெட்வொர்க், பிரச்சனைகளுக்கு இடையே அறிவியலுக்கு புறம்பான இலக்குகளை நிர்ணயித்து சேமிப்புக்கணக்குகள், PLI,RPLI பாலிசிகளை பிடிக்கச்சொல்லி அஞ்சல் இயக்குனரகம் நிர்ப்பந்திக்கிறது.

தல மட்ட அதிகாரிகளும் நிர்ப்பந்திக்கின்றனர். மேலும் பெண் ஊழியர்களுக்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைக்கு அலுவலகம் வரச்சொல்லுதல், ஊழியர்களை 6 மணிக்கு மேலும் வேலை செய்ய சொல்லுதல் போன்ற ஊழியர்களுக்கு புறம்பாக நடக்கும் இதுபோன்ற அவலத்தை மாற்ற மத்திய அரசுக்கு இந்த சம்மேளனம் அறைகூவல் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். 3 கட்டமாக நடக்க திட்டமிடப்பட்ட இப்போராட்டத்தின் முதல் கட்டம் தஞ்சாவூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் S.செல்வக்குமார் கோட்ட செயலாளர். NFPE-P3. A.வெங்கடேஷ். மாநில உதவி செயலாளர்.AIPSBCOEA வை.பஞ்சநாதன். கோட்ட செயலாளர். NFPE-P4. K.ஸ்ரீதர்.கோட்ட செயலாளர். NFPE-GDS. மற்றும் அஞ்சல் துறையை சேர்ந்த ஊழியர்கள் 25க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 2 ஆண் மற்றும் ஒரு பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

First published:

Tags: Local News, Tanjore