ஹோம் /தஞ்சாவூர் /

இந்த ரோட்டுல போன உயிர்க்கு உத்திரவாதம் இல்லை..! தஞ்சைவாசிகளை அலற வைக்கும் சாலை

இந்த ரோட்டுல போன உயிர்க்கு உத்திரவாதம் இல்லை..! தஞ்சைவாசிகளை அலற வைக்கும் சாலை

செல்லம்பட்டி- 

செல்லம்பட்டி-  தஞ்சை விளார் சாலை 

Thanjavur : செல்லம்பட்டியில் இருந்து தஞ்சைக்கு செல்லும் பிரதான சாலை மேடு பள்ளங்களுடன் நிறைந்து இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள செல்லம்பட்டியில் தஞ்சைக்கு செல்லும் முக்கிய பிரதான சாலையான கல்லணை கால்வாய் சாலை இருந்து வருகிறது. இந்த சாலையின் இடதுபுறம் கல்லணை கால்வாயும், வலது புறம் வயல்வெளிகளும் நிறைந்த இயற்கை சூழலில் இச்சாலை அமைந்துள்ளது.

செல்லம்பட்டியை சுற்றியுள்ள 18க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இச்சாலையை தஞ்சை செல்ல தினந்தோறும் பயன்படுத்தி வரும் நிலையில், போக்குவரத்து அதிகம் இருக்கும் முக்கிய பிரதான சாலையாக இச்சாலையாக உள்ளது.

இதில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த தார் சாலையில் தற்போது மேடு பள்ளங்களுடன் நிறைந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆபத்தான குழிகளும் ஆங்காங்கே இருக்கிறது. ஒரு பேருந்து மட்டுமே செல்லும் மிகவும் குறுகிய சாலையாக இருக்கும் இந்த சாலையில் இதுபோன்று ஆங்காங்கே குழிகளும் பள்ளங்களும் இருப்பதால் வாகன ஓட்டிகள் தினம் தோறும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் சாலை இடதுபுரத்தில் இருக்கும் கல்லணை கால்வாயில் விபத்து ஏற்பட்டு தவறி விழும் நிலையும் ஏற்படுகிறது. பல விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது. அதற்கான தடுப்புகளையும் சாலை ஓரத்தில் வைக்கவில்லை.

இதையும் படிங்க : எப்ப சார் கடையை கட்டுவீங்க.. தஞ்சை மீன் மார்க்கெட் சிக்கலால் வியாபாரிகள் கடும் அவதி

இந்த சாலையில் வரும் தனியார் பேருந்துகளும் அதிவிரைவாக செல்கிறது இந்த சாலையின் அருகிலேயே பள்ளிகளும் அமைந்துள்ளது. குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு பெற்றோர்கள் இந்த சாலை வழியே தான் செல்கிறார்கள். இப்பகுதியில் மிகவும் முக்கியமான சாலையாக இருக்கும் இச்சாலையில் இப்படி ஒரு அவல நிலையில் தினமும் பொதுமக்கள் கடந்து வரும் நிலையில் இரவில் மின் விளக்கு வசதி கூட இல்லை இதனால் இச்சாலை இரவு நேரங்களில் இருளமூழ்கி கிடக்கிறது..

மேலும் இதுகுறித்து அப்பகுதி வாகன ஓட்டிகள் கூறுகையில்: ரோடு போடும் காண்ட்ராக்டர்கள் சாலையை சரியாக போடுவதில்லை. இரவு நேரங்களில் தான் மிகவும் சிரமமாக இருக்கிறது. இந்த சாலை வழியே இரவில் வருவதற்கு பெரும் அச்சம் ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலும் இச்சாலையை கடந்து செல்வது சவாலாகவே இருக்கிறது.

Published by:Ramprasath H
First published: