முகப்பு /தஞ்சாவூர் /

பொன்னியின் செல்வன் புகழ் வந்திய தேவன் சிலை இருக்கும் சோழர் கால கோயில் எங்க இருக்கு தெரியுமா?

பொன்னியின் செல்வன் புகழ் வந்திய தேவன் சிலை இருக்கும் சோழர் கால கோயில் எங்க இருக்கு தெரியுமா?

X
வந்திய

வந்திய தேவன்

Ponniyin Selvan Vandhiya Thevan | பொன்னியின் செல்வன் புகழ் வந்திய தேவனுக்கு தஞ்சாவூர் அருகே உள்ள சோழர் காலத்து கோவில் ஒன்றில் சிலை உள்ளது. இந்த சிலை இருக்கும் கோவில் எங்கு உள்ளது. இதன் சிறப்புகள் என்ன என்பதை இத்தொகுப்பில் அறியலாம்..

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

அமரர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம்  வெளியான ஒரு வாரத்திலையே சுமார் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பாக்ஸ் ஆபிஸிஸ் கலெக்ஷன் வசூலித்துள்ளது.  

இந்தப் படத்துல ராஜாக்கள், ராணிகள், இளவரசர்கள் என பல கேரக்டர்ஸ் இருக்காங்க. படத்தை இன்னும் கொஞ்சம் சுவாரசியமா காட்டுவதற்காக சில கேரக்டர்ஸ் கூடுதலா சேரத்திருந்தாங்க பல உண்மையான கேரக்டர்ஸூம் இருக்காங்க. அதுல ரொம்பவே நம்ம மனசுல நின்ன ஒரு கதாபாத்திரம்னு சொன்னா அது வல்லவரையன் வந்திய தேவனுடைய கதா பத்திரம் தான்.

வந்திய தேவனை நோக்கி தான் இந்த கதை களமும் நகரும். இன்னும் சொல்லப்போனால் பொன்னின் செல்வன் புத்தகம் படித்தவர்களுக்கு வந்தியதேவன் என்கிற ஒரு கேரக்டரை மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட வந்தியத்தேவனுடைய சிலை ஒன்று இருக்குனு சொன்னா நீங்க நம்புவிங்கலா?அட ஆமாங்க வந்திய தேவனுடைய உயிர் சிலை தஞ்சாவூர்ல தாங்க இருக்கு.. இப்ப இந்த சிலை இருக்குற ஒரு முக்கியமான கோவில் பற்றியும் வந்தியத்தேவனுடைய சிலையை பற்றியும் இந்த சிறப்பு தொகுப்பில் காணலாம்.

மேலும் படிக்க:  247 தமிழ் எழுத்துக்களால் சிவனுக்கு எழுப்பப்பட்டதா தஞ்சை பெரிய கோவில்..? ஆச்சரியப்படவைக்கும் ராஜராஜ சோழனின் தமிழ் பற்று பற்றிய கதைகள்...

வந்திய தேவனுக்கு சிலை:

தஞ்சாவூர்லயிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் அய்யம்பேட்டை அருகே உள்ள பசுபதி கோயில் என்கிற கிராமத்தில் தமிழ்நாட்டின் பழமையான புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான ஆலந்தூர் புல்லமங்கை கோயில் உள்ளது.

முதலாம் பராந்தக சோழன் கட்டிய இந்த கோயில் அற்புதமான கட்டி கலையுடனும், மெய் சிலிர்க்க வைக்கும் சிலை வடிவமைப்பும் நிறைந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்று. சுமார் 1100 ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த கோயில் திருஞான சம்பந்தர் அவர்களால் பாடல் பெற்ற தலமாகும்...

மேலும் படிக்க:  தஞ்சை பெரிய கோவிலில் இத்தனை பிரபலங்களின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளதா?

இங்கு உள்ள சிவன் பிரம்ம புரீஷ்வரர் என்று ஆழைக்கப்படுவதுண்டு இந்த கோயிலில் தான் யார் கண்ணுக்கும் படாதா விமானம் ஒன்றில் சற்றே சைலன்டா ஒதுங்கி ஒரு சிலை இருக்கும்.. யாருப்பா அது இவ்வளவு அழகா சூப்பர் ஸ்டைலா நிக்ரதுனு உத்து பாத்த வேற யாரு நான் தான் அப்படினு சொல்வது மாறி நம்ம காதல் மன்னன் வானர்குல வீரன், வல்லவரையன் வந்திய தேவன் சும்மா கெத்தா நின்னுட்டு இருப்பாரு .... தேவனுடைய சிற்பம் தான் இந்த சிற்பம்‌...

உண்மை என்னன்னா பொன்னியின் செல்வன் படைப்பிற்காக ஓவியங்களை உருவாக்க அமரர் கல்கியும் ஓவியர் மணியம் அவர்களும் பல இடங்களுக்கு சுற்றி வரும்போது இந்த கோவிலில் அழகிய கம்பீரமான சிற்பத்தினுடைய அழகில் மயங்கி இந்த சிற்பத்தையே மணியம் அவர்கள் வந்திய தேவனுடைய ஓவியமா நமக்கு கொடுத்திருக்கிறாரு. இன்னும் கொஞ்சம் உற்று பார்த்தா தோள்ல உள்ள வடத்தை கம்பீரமா புடிச்சுகிட்டு சிறப்பா இந்த சிற்பம் இருக்கும்.இது யாரோ எவரோ தெரியாது

ஆனா ‌வரலாற்று சிறப்புமிக்க காவியத்தோடு கதாநாயகனா இன்று மாறிட்டாரு. அப்படிங்கறது ஒரு பயங்கரமான ஆச்சரியம் தரக்கூடிய விஷயமாகவே இருக்குது.

மேலும் படிக்க: விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

இது போன்ற பல அழகான சிற்பங்கள் இந்த கோவிலில் இருக்கிறது. சிற்பம் மட்டும் இல்லாம்.இந்த கோவிலில், 21 கல்வெட்டுகள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆதித்த கரிகாலன் கால கல்வெட்டு ஒன்று இக்கோயிலின் காளாபிடாரிக்கு கொடையளித்த விவரத்தைச் சொல்கிறது. ராஜராஜசோழனின் 12-ஆம் ஆட்சி கால கல்வெட்டு ஒன்று சந்திர கிரகணத்தன்று அங்கு சபை கூடியதைக் குறிக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலை பார்க்க வேண்டும் என்றால் தஞ்சை- கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள பசுபதி கோவில் என்கிற கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோவிலை சென்று பார்க்கலாம்.வந்தியத்தேவனுடைய சிற்பத்தை மட்டுமல்லாமல்.. கல்வெட்டுகள், என்னற்ற அழகிய சிற்பங்கள் ஆகியவற்றை இந்த 1100 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் , சென்று காணலாம்.

    First published:

    Tags: Local News, Ponniyin selvan, Thanjavur