ஹோம் /தஞ்சாவூர் /

பொங்கல் சிறப்பு பேருந்து... கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

பொங்கல் சிறப்பு பேருந்து... கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

பொங்கல் சிறப்பு பேருந்து

பொங்கல் சிறப்பு பேருந்து

Thanjavur District | பொங்கல் பண்டிகையை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அவை எங்கிருந்து புறப்படும் என்ற விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

வரும் சனிக்கிழமை (ஜனவரி 14) போகிப் பண்டிகையுடன் தொடங்குகிறது பொங்கல் பண்டிகை. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பலரும் சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழகம் சார்பில் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக எந்தவித சிரமமும் இன்றி, இடையூறும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதே போல் திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும், கும்பகோணம் போக்குவரத்துக்கழக இயக்க பகுதிக்குட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும், முக்கிய நகரங்களில் இருந்தும் பஸ்கள் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல தற்காலிக பஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பஸ்கள் தாம்பரம் சானிடோரியம் அறிஞர்அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

Must Read : அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..

நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் வழித்தட பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Pongal 2023, Pongal festival, Special buses, Thanjavur