ஹோம் /தஞ்சாவூர் /

பொங்கல் பண்டிகை... தஞ்சாவூர்-கும்பகோணம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகை... தஞ்சாவூர்-கும்பகோணம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்

சிறப்பு ரயில்

சிறப்பு ரயில்

Thanjavur Special Train | தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக தஞ்சாவூர்-கும்பகோணம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக தஞ்சாவூர்-கும்பகோணம் வழியாக அடுத்த மாதம் (ஜனவரி) 17ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை கொண்டாடுவதற்காக. சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பணிபுரிந்து வருபவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அவ்வாறு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அவ்வாறு சொந்த ஊருக்கு செல்பவர்கள் மீண்டும் சென்னை போன்ற ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக தஞ்சாவூர்-கும்பகோணம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜனவரி 17ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 11.40 மணிக்கு திருவனந்தபுரம் கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் (எண்:06044) நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு இரவு 11.05 மணிக்கும், கும்பகோணத்திற்கு இரவு 11.40 மணிக்கும் வந்து சேருகிறது. பின்னர், மயிலாடுதுறை சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு மறுநாள் காலை 6.20 மணிக்கு சென்றடைகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து 18ஆம் தேதி (புதன் கிழமை) காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06043) அதே வழியாக கும்பகோணத்திற்கு மாலை 3.45 மணிக்கும், தஞ்சைக்கு மாலை 4.23 மணிக்கும் வந்து சேருகிறது.

Must Read : சோழர்களின் வெற்றி தெய்வம்... திருச்சி உக்கிர காளியம்மன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

பின்னர் திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி வழியாக கொச்சுவேலிக்கு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்றடையும். விரைவில் முன்பதிவு இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடக்கம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

First published:

Tags: Local News, Pongal 2023, Special trains, Thanjavur