ஹோம் /தஞ்சாவூர் /

இளவட்ட கல்லை தூக்கி அசத்திய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.. தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் கோலாகல பொங்கல்..

இளவட்ட கல்லை தூக்கி அசத்திய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.. தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் கோலாகல பொங்கல்..

X
தஞ்சாவூர்

தஞ்சாவூர்

Pongal 2023 : தஞ்சாவூரில் வெளிநாட்டவர்கள் பங்கேற்ற பொங்கல் விழாவில் ஆட்சியர் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை முனியாண்டவர் கோயில் வளாகத்தில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதனிடையே, நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்ற இவ்விழாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாலை அணிவித்து, வரவேற்பு அளிக்கப்பட்டன.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். இந்திய சுற்றுலா துறையின் தென் மண்டல இயக்குநர் முகமது பாரூக் முன்னிலை வகித்தார். விழாவுக்கு வந்த வெளிநாட்டினருக்கு முதலில் தமிழக பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது. பின்னர் மாட்டு வண்டிகளில் ஏறி கிராமத்தை சுற்றி வந்தனர்.பின்னர் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, பாரம்பரிய விளையாட்டான கபடி, உறியடி, கயிறு இழுத்தல், இளவட்ட கல் துாக்கும் போட்டி ஆகியவை நடைபெற்றது.

இதில் ஆர்வத்துடன் கலந்துக்கொண்ட வெளிநாட்டினர் இளவட்ட கல்லை துாக்கி அசத்தினர். மேலும் கயிறு இழுத்தல் போட்டியிலும் பங்கேற்றனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில், நடன நிகழ்ச்சியும், தமிழக கலைஞர்களின் கோலாட்டம், பறையாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம் போன்ற கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. அத்துடன் விழா நடைபெறும் இடத்தில், கூடை முடையதல், ஜோதிடம், பானை செய்தல் போன்றைவற்றை குறித்து விளக்கமளிக்கப்பட்டன.

விழாவில், பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், அர்ஜென்டினா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து, 75 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Pongal 2023, Tanjore