ஹோம் /தஞ்சாவூர் /

சீறிப்பாய்ந்த காளைகள்.. தஞ்சை திருக்கானூர்பட்டியில் அனல் பறக்க நடந்த ஜல்லிக்கட்டு போட்டி..

சீறிப்பாய்ந்த காளைகள்.. தஞ்சை திருக்கானூர்பட்டியில் அனல் பறக்க நடந்த ஜல்லிக்கட்டு போட்டி..

X
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Thanjavur Jallikattu : தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அரசின் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மாதா கோவில் தெருவில் வாடிவாசல் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்தன. இதில் வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை ஒரு அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டன. இந்த நார்களில் காளைகளும், வீரர்களும் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

காளைகள் பார்வையாளர் பகுதிக்குள் சென்று விடாமல் இருப்பதை தடுக்க சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன. மாடு பிடி வீரர்களை களத்துக்குள் அனுப்புவதற்கு தனி பாதை ஏற்படுத்தப்பட்டது. வீரர்கள் காயம் அடைந்தால் உடன் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாட்டுடன் உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர்கள் இணையத்தில் தங்களை பற்றி பதிவு செய்து கொண்டனர். மேலும் பெரிய மாட்டிற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

ஆன்லைன் டோக்கன் முறைப்படி வரிசையாக மட்டுமே காளைகள் உள்ளே அனுமதிக்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் அரசின் சட்டத்திற்கு உட்பட்டு தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். விழாவிற்கு வருபவர்கள், விழாக்குழுவினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விழாக்குழு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் 542 காளைகள் பதிவு செய்யப்பட்டு மருத்துவர்கள் அவற்றிற்கு உரிய சோதனைகளை மேற்கொண்டனர். மேலும் 401 மாடுபிடி வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்திருந்தனர்.

தொடர்ந்து நேற்று காலை 7.15 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடக்கி வைத்தார். திருக்கானூர்பட்டி பங்குதந்தை தேவதாஸ் இக்னேசியர் முன்னிலை வகித்தார். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வென்ற காளையின் உரிமையாளருக்கும் மாடு படி வீரர்களுக்கும் அண்டா, குவளை, கட்டில், மெத்தை, டீவி, சைக்கிள், மிக்ஸி, போன்ற பல பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், வல்லம் டிஎஸ்பி,நித்யா தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், விழா கமிட்டியினர், ஊர் பொது மக்கள் செய்திருந்தனர். வல்லம் டிஎஸ்பி நித்யா தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

First published:

Tags: Local News, Tanjore