தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள பாரில், நேற்று முன்தினம் மது வாங்கி குடித்த குப்புசாமி, விவேக் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் உயிரிழந்தவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலந்திருப்பதாக மருத்துவ அறிக்கை வந்ததையடுத்து, மதுக்கடைக்கு சயனைடு எப்படி வந்தது? தற்கொலைக்கு முயன்றார்களா? யாரேனும் கொலை செய்ய முயற்சித்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. மேலும், மதுபான பாரின் உரிமையாளர் பழனி, ஊழியர் காமராஜ் உள்ளிட்ட 8 பேரிடம் 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக விவேக் தற்கொலை செய்திருக்கலாம் என்று கோணத்தில் அவரது நெருங்கிய நண்பரான தமிழரசனிடமும் விசாரணை நடைபெறுகிறது. இதனிடையே, சீல் வைக்கப்பட்ட மதுபான பாரில் தடயவியல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சயனைடு கலக்கப்பட்டதற்காக தடயங்களை எதுவும் உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் சம்பவ இடத்தில் உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.