முகப்பு /தஞ்சாவூர் /

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்த தஞ்சை போலீசார்..

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்த தஞ்சை போலீசார்..

X
ஹெல்மெட்

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்த தஞ்சை போலீசார்

Thanjavur News : தஞ்சையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பாரபட்சமின்றி அபராதம் விதித்த போலீசார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த மாதம் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து போக்குவரத்து காவல் துறையினர் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதங்களை தொடர்ந்து விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவுப்படி தஞ்சை மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ரயிலடி நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000-ம் . லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாதவர்களுக்கு ரூ.5000-ம் அதனை புதுபிக்காதவர்களுக்கும் இருசக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் சென்றால் 1000 அபராதமாக விதிக்கப்பட்டது‌‌.

மேலும் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின்படி நம்பர் பிளேட் வடிவமைக்காதவர்களுக்கும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அறிவுறுத்தினர்.

First published:

Tags: Local News, Tanjore