ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் இங்கெல்லாம் நாளை மின் தடை ஏற்படும்...

தஞ்சாவூரில் இங்கெல்லாம் நாளை மின் தடை ஏற்படும்...

மின்தடை அறிவிப்பு

மின்தடை அறிவிப்பு

Thanjavur Power Cut : தஞ்சாவூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள 110 கி.வோ தொகுப்பு துணை மின்நிலையத்தில் நாளை (அக்டோபர் 29ம் தேதி) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, 110 கி.வோ தொகுப்பு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் 33 கே.வி மின்பாதை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி-கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Must Read : 10 தலைகளுடன் ராவணன்... வியக்கவைக்கும் புதுக்கோட்டை குடுமியான்மலை சிற்பங்களின் புகைப்பட தொகுப்பு!

எனவே, நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபாநந்தவனம், சுக்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur