ஹோம் /தஞ்சாவூர் /

மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் மாற்றுத் திறனாளிகள் வழக்காடு மன்றம்

மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் மாற்றுத் திறனாளிகள் வழக்காடு மன்றம்

X
தஞ்சை

தஞ்சை

Tanjore District News : மத்திய அரசைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

மத்திய அரசை கண்டித்து தஞ்சையில்அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கம் சேர்ந்தவர்களால் வழக்காடு மன்றம் நடைபெற்றது.

மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கத்தின் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் பல இடங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

அந்த வகையில் தஞ்சையிலும் நேற்று மாலை ரயில்வே நிலையம் எதிர்புறம் ஒன்றிய அரசை எதிர்த்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த வழக்காடு மன்றத்தை நடத்தினர்.

இதில் கடந்த 2016ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை பாராளுமன்றத்தில் அறிவித்த நிலையில் இதுவரையிலும் அதை செயல்படுத்தாமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகவும் இருக்கிறது என இந்த குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க : தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அரசு வழங்கும் நிலையில் ஆயிரம் ரூபாய் என்பது ஒரு மாத உணவிற்கு கூட பத்தாது, அப்படிப் பார்த்தால் ஒரு நாளைக்கு 30 ரூபாய் தான் கிடைக்கிறது. இதில் எப்படி மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையை நடத்த முடியும்.

இதனாலேயே பலர் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளை செல்ல பிள்ளைகள் எனசொல்லி ஆசை வார்த்தை காட்டி தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான எந்த ஒரு நல்ல திட்டங்களையும் செயல்படுத்தாமல் இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகையை அதிகரித்து தர வேண்டும், அவர்களுக்கான உபகரணங்களை ஏற்படுத்தி தர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சாலைகளில் செல்வதற்கு சாய்வு தளங்களை அவர்களுக்காக அமைத்து தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இதுபோன்று பல திட்டங்கள் கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில் அதை செயல்படுத்த வேண்டும் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

First published:

Tags: Local News, Tanjore