முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சையில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி.. இங்கு இதெல்லாம் இருக்கா!

தஞ்சையில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி.. இங்கு இதெல்லாம் இருக்கா!

X
தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

Photo Exhibition In Thanjavur | தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி தஞ்சாவூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Thanjavur, India

தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தஞ்சையில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க,செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் “ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி” என்ற தலைப்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

மார்ச் மாதம் 27ம் தேதி வரை நடக்க இருக்கும் இக்கண்காட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டும் அல்லாமல், தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய அரசு திட்டங்களின் தொகுப்பு புகைப்படங்களாக இடம் பெற்றுள்ளன.

புகைப்பட கண்காட்சியினை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் புத்தக கண்காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் உணவு திருவிழா,சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் கண்டு மகிழ, பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து அமையப்பட்டுள்ளன. இந்தபுகைப்பட கண்காட்சி அரங்கில் தினம் தோறும் மாலை நேரத்தில் பொதுமக்களின் மனம் கவரும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.ஷ

இதையும் படிங்க : ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. மீண்டும் வேலை வாய்ப்பு!

நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, அரசு இசைப்பள்ளி பள்ளி கல்லூரி மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சி, தஞ்சாவூர் மாவட்ட கவிஞர்கள் பங்குபெறும் கவியரங்கம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் 27ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Thanjavur