ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி!!

தஞ்சையில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி!!

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

Thanjavur Unsung Freedom Fighters | தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் அறியப்படாத சுதந்திர வீரர்களின் புகைப்படம் கண்காட்சி நடைபெற்றது 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. மூன்று நாட்கள் வரை நடந்த இந்த கண்காட்சியை கல்யாணசுந்தரம் எம்.பி, துரை சந்திரசேகரன் எம். எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்தநிகழ்ச்சிக்கு முதல் நாள் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மத்திய மக்கள் தொடர்பகம் கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் வரவேற்றார். இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை வாழ்த்துரை வழங்கினார்.

இந்த கண்காட்சியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் அரித்துவாரமங்கலத்தில் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்து சுதந்திரப் போராட்டப் போராட்டத்தில் பங்குபெற்ற ஏ.வி. ராமசாமி, கிருஷ்ணமூர்த்தி, வாணியம்மாள், சொர்ணம்மாள், கணபதி, வாட்டாகுடி இரணியன் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாறு குறித்து அவர்களின் புகைப்படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க:  சங்கீத உலகிற்கு பெயர்போன திருவையாறுக்கு பெயர் வந்தது எப்படி தெரியுமா?

இதேபோல் பிரதம மந்திரி முத்ரா திட்டம், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த வரலாறை பார்த்து தெரிந்து கொள்வதற்காக கல்லூரி மாணவ- மாணவிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை பார்த்து தெரிந்து கொண்டனர்.

மேலும் படிக்க:  தஞ்சாவூர் மாவட்டத்தில் மறக்காமல் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்.!

மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொண்டனர். தொடர்ந்து மூன்று நாட்கள்   நடந்த  இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் தஞ்சை பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு புகைப்படங்களை நெகிழ்வுடன் பார்த்து விழாவை சிறப்பித்தனர்.  மேலும், தஞ்சையில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சியை கல்யாணசுந்தரம் எம்.பி, துரை சந்திரசேகரன் எம். எல்.ஏ. , மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் பார்வையிட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இது குறித்து திருச்சி மத்திய மக்கள் தொடர்பகம் கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் கூறுகையில்:நாட்டின் 75 வது சுதந்திரத்தை சிறப்பிக்கும் ஒரு பகுதியாகமாணவர்களிடம் சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி தெரிந்து கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே..இதன் முக்கிய நோக்கமாகும்.... மேலும் தமிழ்நாட்டில் பல இடங்களில் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம், அடுத்ததாக தென்காசியில் நடத்த உள்ளதாகவும்... கூறினார்

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur