ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தஞ்சாவூரில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

கொள்ளிடம் ஆறு

கொள்ளிடம் ஆறு

Flood in Thanjavur : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைப்பேசி எண் விவரங்களை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் 1.75 லட்சம் கன அடி தண்ணீர் இரு கரைகளையும் தொட்டு செல்வதால் கரையோர கிராம மக்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

கொள்ளிடத்தில் தற்போது 1.75 லட்சம் கன அடி தண்ணீர் உபரி நீராக திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ள நீர் செல்கிறது.

இதனால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கொள்ளிடம் கரையோர கிராம மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை திருவிடைமருதூர் வட்ட தாசில்தார் சுசிலா, மண்டல துணை வட்டாட்சியர்கள் விமல், மனோரஞ்சிதம், வருவாய் ஆய்வாளர் அனுப்பிரியா மற்றும் அலுவலர்கள் கடந்த 2 நாட்களாக ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து கொள்ளிடத்தில் தண்ணீர் அதிகமாக வந்தாலோ, தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலோ பாதிக்கப்படும் கிராம மக்களை தங்க வைத்து உணவு மற்றும் உதவிகள் வழங்க தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வட்டாச்சியர் சுசிலா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்திலும் அதிக மழை பெய்தால் கரையோர மக்களுக்கும், தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என பொதுப்பணி துறையின் நீர்வள ஆதாரப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கொள்ளிடத்தில் கரை உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டால், நிலைமையை சமாளிக்க பொதுப்பணித்துறை தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : விஜய்சேதுபதி பட சூட்டிங் ஸ்பாட் இதுதானா! - அட இது நம்ம புதுக்கோட்டையில தாங்க இருக்கு!

இதற்காக பொதுப்பணித்துறை சார்பில் 50 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி தொடங்கி அணைக்கரை வரையிலான 40 கிலோ மீட்டர் தூரம் கொள்ளிடத்தில் இரு கரைகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம், மற்றும் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை போனில் தொடர்வுகொண்டு தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார். அதன்படி 1077 என்ற இலவச எண்ணுக்கும், 04362-264114 மற்றும், 04362-264115 ஆகிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Flood warning, Local News, Thanjavur