முகப்பு /தஞ்சாவூர் /

Ph.D வாத்தியார் டூ ஜூஸ் கடை தொழில்.. அசத்தி வரும் தஞ்சை ஆசிரியர்..! 

Ph.D வாத்தியார் டூ ஜூஸ் கடை தொழில்.. அசத்தி வரும் தஞ்சை ஆசிரியர்..! 

X
ஜூஸ்

ஜூஸ் கடை 

Thanjavur District | தஞ்சாவூரில் ஜூஸ் கடை நடத்திவரும் முனைவர் பட்டம் ஆய்வாளர், தனது ஆசிரியர் பணியை விட்டுவிட்டு பழச்சாரு கடை கடத்திவருகிறார்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டத்தைசேர்ந்தவர் ஆரோன் செபஸ்டின் ராஜ் பிஹெச்டி டாக்டரேட் முடித்து தனியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.2021-உடல்நல சரியில்லாமல் 3 மாதம் கல்லூரி செல்லாத நிலையில் அப்போதுதான் தெரிந்துள்ளது‌.

நம்முடைய வருமானம் இல்லாமலும் குடும்பத்தை நடத்தலாம் என்று அதன் பிறகுநம் வருமானத்தை பெருக்க வேண்டும் நமக்கு பிடித்த மாதிரி வொர்க் ஸ்ட்ரெஸ் இல்லாமல் குடும்பத்தினருடன் குழந்தைகளிடம் நேரம் செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வேறு ஏதாவது தொழில் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளார்.

இவருடைய அண்ணன் ஏற்கனவே கும்பகோணத்தில் ஜூஸ் கடை நடத்தி வரும் நிலையில் அவரிடம் சென்று அதைப் பற்றி தெரிந்து கொண்டு இவரும் தஞ்சை புதுக்கோட்டை சாலையில் ஆட்டோவில் ஜூஸ் கடை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் பேசினோம்.

உங்களுடன் பணி புரிந்த ஆசிரியர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள்?

ஆரம்பத்தில் என்னுடன் பணிபுரிந்த ஆசிரியர்களிடம் இதை பற்றி பெரிய அளவில் நான் சொல்லிக்கொள்ள வில்லை.ஒரு சிலருக்கு தெரியும் அவர்கள் எதற்கு இவ்வளவு படித்துவிட்டு நல்ல வேலையை விட்டுவிட்டு ஏன் ஜூஸ் கடை நடத்துறீங்க அப்படி எல்லாம் கேட்டு இருக்காங்க எனக்கு இது புடிச்சிருக்கு எனக்கு இந்த லைஃப் புடிச்சிருக்கு அப்படின்னு ஒரே பதில் சொல்லிடுவேன்.

ஒரு சில ஆசிரியர்ஆரம்பத்தில் என் கடையை கிராஸ் செய்யும்போதுஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது இந்த தொழிலில் நான் வாங்கிய ஊதியத்தை விட இரண்டு மடங்கு லாபம் பெறுகிறேன் குடும்பத்தாருடன் தினமும் டைம் ஸ்பென்ட் பண்ணுகிறேன். மேலும் ஆரம்பத்தில் ஆசிரியர் பணியை முழு நேரமாகவும் ஜூஸ் கடையை பகுதி நேரமாகவுமே செய்து வந்தேன் ஆனால் தற்போது ஜூஸ் கடையை முழு நேரமாகவும் ஆசிரியர் பணியை எப்போதாவது பி.எட் மாணவர்களுக்கு பகுதி நேரமாக வகுப்பு எடுத்து வருகிறேன்.

வருடம் முழுவதும் 1+1 ஆஃபர்:

ஜூஸ் கடை லைஃப் எனக்கு புடிச்சிருக்கு.தினமும் புது புது மனிதர்களை சந்திக்கிறேன்.அவர்களிடம் மனம் திறந்து பேசுகிறேன். என் குழந்தைகளை தினமும் பள்ளியில் விட்டு வருகிறேன்.கல்லூரியில் ஆசிரியராக இருந்தபோது இருந்த லைஃபை விட தற்போது நான் என்ஜாய் பண்ணுகிறேன் என்று கூறினார். மேலும்,இவருடைய ஜூஸ் கடையில் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, சாத்துக்குடி, கிர்ணி, என பத்து வகையான பழ ஜூஸ்களை30 லிருந்து 50 ரூபாய் வரை விற்பனை செய்து வரும் இவர் வருடம் முழுவதும் 1+1 ஆஃபரை அளித்து வருகிறார்.

First published:

Tags: Juice Shop, Local News, Thanjavur