ஹோம் /தஞ்சாவூர் /

ப்ரௌன் கேக்.. கிறிஸ்துமஸ் கேக்... குவியும் ஆர்டர்கள்.. தஞ்சையில் களைகட்டும் கேக் விற்பனை

ப்ரௌன் கேக்.. கிறிஸ்துமஸ் கேக்... குவியும் ஆர்டர்கள்.. தஞ்சையில் களைகட்டும் கேக் விற்பனை

X
கிருஸ்துமஸ்

கிருஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் 

Tanjore News : கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஸ்டார், அலங்கார பொருட்களின் விற்பனை தஞ்சாவூர் பகுதிகளில் களைக்கட்டியுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் பொதுமக்கள் கேக்குகளை ஆர்டர் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மூர்த்தி கேக் ஷாப்பில் அதிக அளவிலான பொதுமக்கள் கேக்குகளை வாங்க தொடங்கிட்டாங்க.

ஏசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏசுவின் பிறப்பை முன் அறிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம். அதே போல ஏசு மாட்டு தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் வீடுகள், தேவாலயங்களில் குடில்கள் அமைக்கப்படும்.

அதில் ஏசு பாலன், அவரது பெற்றோர் சூசையப்பர் மாதா,தேவதூதர்கள், ராஜாக்கள் ஆகியோரின் சொரூபங்களும், ஆடு, மாடுகள் உள்ளிட்ட சிறிய உருவங்களும் இடம் பெற்றிருக்கும். இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக தேவையான பொருட்களை வியாபாரிகள் கொள்முதல் செய்து கடைகளில் குவித்துவிடுவர். அவற்றை கிறிஸ்தவர்கள் மிகுந்த ஆர்வமுடன் வாங்கி சென்று பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவர்.

அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஸ்டார், அலங்கார பொருட்களின் விற்பனை தஞ்சை பகுதிகளில் களை கட்ட தொடங்கிய நிலையில் கிருஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்குகளும் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஆர்டர் செய்ய தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க:  புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அமராவதி மலைப்பகுதியில் தயாராகும் விடுதிகள்

அந்த வகையில் தஞ்சாவூர் பகுதிகளில் உள்ல கேக் ஷாப்பில் அதிக அளவிலான கேக் ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால் தற்போது விறுவிறுப்பாக கேக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ப்ரௌன் கேக், கிருஸ்துமஸ் கேக், பாதாம் கேக், புட்டிங்ஸ் கேக் போன்ற பல வகையான குழந்தைகள் விரும்பும் கேக்குகளும் விறுவிறுப்பாக செய்யப்பட்டு வருகிறது. மேலும் கேக்குகள் காலையில் ஆர்டர் கொடுத்தாலும் மாலையில் வாங்கி கொள்ளலாம் என்று கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

First published:

Tags: Christ Church, Christmas, Christmas eve, Jesus Christ, Local News, Tamil News