முகப்பு /தஞ்சாவூர் /

புத்தக பிரியர்களுக்கு ஜாக்பாட்.. தஞ்சை புத்தக கண்காட்சியில் சிறப்பு சலுகை! எங்கு நடக்குது தெரியுமா?

புத்தக பிரியர்களுக்கு ஜாக்பாட்.. தஞ்சை புத்தக கண்காட்சியில் சிறப்பு சலுகை! எங்கு நடக்குது தெரியுமா?

X
புத்தக

புத்தக கண்காட்சி 

thanjavur book exhibition | கடந்த 25ஆம் தேதி தொடங்கிய தஞ்சாவூர் புத்தக கண்காட்சியில் பொதுமக்கள் புத்தகங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

புத்தக வாசிப்பாளர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் தஞ்சையில் புத்தக கண்காட்சி தொடங்கியுள்ளது.

தஞ்சாவூர் தெற்கு வீதியில் மனோஜியப்பா நகரில் உள்ள ராமசாமி பத்தர் கல்யாண மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

திருக்குறள், கல்கி,ஆன்மீகம்,ஜோதிடம், சுயசரிதை, பொதுஅறிவு, நாவல், மருத்துவம் கதை, கவிதைகள், இலக்கியம், சட்ட புத்தகம், சாண்டில்யன், பாலகுமாரன், இந்திரா சௌந்தர்ராஜன்,  சுஜாதா, இறையன்பு IAS, எஸ்.ராமகிருஷ்ணன், ரமணிச்சந்திரன், லட்சுமி, இந்துமதி கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.  முத்துக்குமார், பா.விஜய், முத்துலெட்சுமி ராகவன் சுய முன்னேற்றம் ஆகியோரின் புத்தகங்களும் பொது கட்டுரைகள், குழந்தை வளர்ப்பு, சமையல் கலை, ஆன்மீகம் முதல் அரசியல் என எண்ணற்ற வகையான புத்தங்களுடன் கிட்டத்தட்ட 1 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும் சாகித்திய அகாதமி விருது பெற்ற லதாவின் கழிவறை இருக்கை மற்றும் இராஜேந்திரனின் காலா பாணி ( நாடு கடத்தப்பட்ட முதல் அரசரின் புத்தகம்) ஆகியவையும் இடம்பெறுள்ளன.மேலும் ஆங்கில புத்தகங்களும் இடம்பெற்றுள்ளது, இதில் சோழர்களை பற்றிய‌ புத்தகங்களும் இடம்பெற்றுள்ளது.

ரூ-40-யிலிருந்து 1500ரூ-க்கும் அதிகமான விலைகளில் புத்தகங்கள் வாங்கலாம். கடந்த 25-01-2023 தொடங்கிய இந்த கண்காட்சி 13-02-2023 வரை நடைபெற இருக்கிறது. மேலும் புத்தகம் வாங்கும் அணைவருக்கும் 10% சிறப்பு தள்ளுபடியும் இருக்கிறது. புத்தங்களை வாங்க தஞ்சையில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

First published:

Tags: Book Fair, Local News, Tanjore, Thanjavur