முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சையில் கொளுத்தும் வெயில்.. குளிர்பான கடைகளில் தஞ்சமடையும் மக்கள்.. 

தஞ்சையில் கொளுத்தும் வெயில்.. குளிர்பான கடைகளில் தஞ்சமடையும் மக்கள்.. 

X
தஞ்சையில்

தஞ்சையில் கொளுத்தும் வெயில்

Thanjavur District News | தஞ்சாவூரில் அதிக வெயிலின் தாக்கம் காரணமாக இளநீர் உள்ளிட்ட, உடலுக்கு குளிர்சி தரும் பானங்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. 

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் சுட்டெரித்த வெயிலின் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதனால், தர்பூசணி பழம், இளநீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே, மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். அதிலும் அக்னி நட்சத்திர காலத்தில் தான் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். இந்நிலையில் பருவகால மாற்றத்தின் காரணமாக தஞ்சையில் அடிக்கடி மழை பெய்தும், வெயில் அடிப்பதுமாக இருந்து வருகிறது. மிதமான வெயில் அடிக்க வேண்டிய இந்த காலத்தில் அக்னி நட்சத்திரம் போல் வெயில் சுட்டெரித்து வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்துகிறது. பகலில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் இரவிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. தஞ்சையில்வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. காலை 9 மணி முதலே கொளுத்த தொடங்கிய வெயிலினால் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அனல் காற்று வீசியது.

தர்பூசணி விற்பனை :

இந்நிலையில்,வெயிலின் சூட்டை தணிக்க தஞ்சை பெரிய கோயில்அருகே சாலை ஓரங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த இளநீர், தர்பூசணி கடைகளில் விற்பனை களைகட்டி வருகிறது.மேலும், குளிர்பான கடைகளிலும், பழச்சாறு, குளிர்பானங்கள் அருந்த மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பொதுமக்களுக்கு வசதியாக பகல் முழுவதும் குழாய் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு மக்கள் நடந்து செல்லும் இடங்கள் குளிர்விக்கப்பட்டு வருகின்றன.

First published:

Tags: Local News, Thanjavur, Weather News in Tamil