ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சை மக்கள் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்... கலெக்டர் தகவல்..

தஞ்சை மக்கள் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்... கலெக்டர் தகவல்..

தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

Tanjore District News: தஞ்சை மாவட்ட மக்கள் அம்பேத்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாவட்ட மக்கள் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை யின் மூலம் 2022-23ம் ஆண்டிற்கு டாக்டர் அம்பேத்கார் தமிழ்நாடு அரசு விருது ஆதிதிராவிடர் நல மக்களின் முன்னேற்றத்திற்கும், அரிய தொண்டு செய்பவர்களுக்கும் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் ஆகியோர்களில் சிறந்தோர்க்கும் திருவள்ளுவர் திருநாளில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2022ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கார் தமிழ்நாடு அரசு விருது 2023ம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதற்கான உரிய படிவத்தினை தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி பெற்று கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழியர்களை அலறவிட்ட பாம்பு... - தஞ்சையில் பரபரப்பு

பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய முன்மொழிவுகளை இந்த மாதம் 30-ம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore