Home /thanjavur /

தஞ்சாவூரில் மரத்தின் நடுவே செல்லும் மின் கம்பியால் மக்கள் அச்சம் ! 

தஞ்சாவூரில் மரத்தின் நடுவே செல்லும் மின் கம்பியால் மக்கள் அச்சம் ! 

தஞ்சாவூர் மின்கம்பி செல்லும் மரம்

தஞ்சாவூர் மின்கம்பி செல்லும் மரம்

Thanjavur | தஞ்சாவூரில் மரத்தை உரசிச் செல்லும் மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைக்கின்றனர்.

தஞ்சாவூர் EB காலணி பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் அரச மரத்தின் நடுவில் மின் கம்பிகள் மரத்தில் படும்படி இருப்பதால் அதை பார்க்கும் மக்கள் அச்சப்பட்டு செல்கின்றனர். மேலும் அந்த மின் கம்பிகளை அகற்றுவதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஏற்கனவே தஞ்சை, களிமேடு பகுதியில் ஏற்பட்ட மின் கசிவு விபத்தால் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து, இது போன்று தவறாக இருக்கும் மின் கம்பிகளால் தஞ்சை மக்கள் பலர் பதற்றம் அடையும் நிலையில் இருக்கின்றனர். மேலும் இதுபோன்ற மின்கம்பிகள் இருப்பதை கண்டு மேலும் அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியில் கடை‌ வைத்திருக்கும் உரிமையாளர்களிடம் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது:
இந்த மின் கம்பிகள் அரசமரம் வருவதற்கு முன்னாலேயே அமைக்கப்பட்டதாகவும், பல மாதங்களுக்கு முன்பு இந்த மின் கம்பி வழியே மின்சாரம் சென்றதாகவும், தற்போது இந்த வழியில் மின்சாரம் செல்லவில்லை எனவும் கூறினார்.

மின்கம்பி செல்லும் மரம்


ஆனால் சில நேரங்களில் மட்டும் இந்த வழியில் எப்போதாவது மின்சாரத்தினை மாற்றி அமைப்பார்கள். ஆனால் தற்போது இந்த மின் கம்பி வழியே மின்சாரம் ஏதும் செல்லவில்லை. மேலும் அந்த மின் கம்பிகளை அகற்றுவது பாதுகாப்பானது என்றும் மக்கள் அச்சப்படாமலும் இருப்பார்கள் என்று கூறினார்.

அரசமரம்


ஏற்கனவே தஞ்சைகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் பல இடங்களில் மின்தடையானது அதிக அளவில் ஏற்படுகிறது. ஒருவேளை துரதிர்ஷ்டவசமாக இவ்வழியே மின்சாரம் வந்தாலோ பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று கூறினார்.

இந்த EB காலனி பகுதியானது தஞ்சையின் ஒரு முக்கியமான பகுதியாகவும் பலதரப்பட்ட மக்கள் இந்த இடத்தில் அதிக அளவில் வந்து போவதால் இந்த நிலைகள் பற்றி மக்களுக்கு தெரியாது. பார்க்கும் மக்கள் அச்சத்துடனே செல்கிறார்கள். எனவே இந்த மின் கம்பிகளை அகற்றி வேறு வழியில் மாற்றி மாற்றிவிட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி