முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை மாவட்டத்தில் திடீரென கொட்டிய கன மழை... பொதுமக்கள் மகிழ்ச்சி!

தஞ்சை மாவட்டத்தில் திடீரென கொட்டிய கன மழை... பொதுமக்கள் மகிழ்ச்சி!

X
மழை

மழை

Thanjavur District | தஞ்சாவூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

மார்ச் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கோடை மழைபெய்தது. அதனைத் தொடர்ந்து தஞ்சையிலும் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் சுட்டெரிக்க தொடங்கியது. குளிர்ச்சியை தேட கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் இளநீர், நுங்கு, கரும்புச்சாறு, தர்ப்பூசணி பழம் ஆகியவற்றை தேடி சென்றனர்.

அதிலும் முக்கியமாக இந்த மாத தொடக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில்,தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னர், ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், பட்டுக்கோட்டையிலும் மழை வெளுத்து வாங்கியது, தஞ்சையிலும் மிதமான மழை பெய்தது இதனால் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

First published: