முகப்பு /தஞ்சாவூர் /

காதணி விழா பேனரில் ஆதார் கார்டு எதுக்குப்பா? குழப்பிய பட்டுக்கோட்டை இளைஞர்கள்

காதணி விழா பேனரில் ஆதார் கார்டு எதுக்குப்பா? குழப்பிய பட்டுக்கோட்டை இளைஞர்கள்

X
இளைஞர்கள்

இளைஞர்கள் வைத்துள்ள பேனர்

Pattukottai Today News | தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தன் நண்பனின் காதணி விழாவிற்காக அடித்த பேனரில் ஆதார் அட்டை அச்சடித்து வைத்துள்ளதால் சிரிப்பழையை‌ ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நெய்வேலி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தன் நண்பனின் காதணி விழாவிற்காக அடித்த பேனரில் ஆதார் அட்டை அச்சடித்து வைத்துள்ளனர். கபாடி போட்டி மேல் உள்ள அதீத ஆர்வத்தாலையும் மேட்ச் ஆட போற இடத்தில் நட்ககும் சிறுசிறு பிரச்சனைகளையும் ஞாபகப்படுத்தும் விதமா இப்படி ஒரு சம்பவத்தை செஞ்சுவிட்டு இருக்காங்க.

அந்த பேனரில் குறிப்பிட்டுள்ள வாசகமானது ஒரு ஊர் ஆட்டம், கேப்டன் - பாண்டியன், துணை கேப்டன்- மருது பாண்டியன் அப்டினு காதணி செல்வங்களான இளைஞர்களின் நண்பர்களை குறிபிட்டுருக்காங்க. விழா நடக்கும் நாளை ஆட்ட நாள் என்றும், விழா நடக்கும் இடத்தை ஆடுகளம் என்றும் குறிப்பிட்டு இருக்காங்க. இப்பெல்லாம் பெரும்பாலான ஊர்களில் நடக்குற கபடி மேட்ச்ல ஆதார் கார்டை வைச்சு தான் ரிஜிஸ்டர் செய்யறாங்களாம். அதுனால ஆதார் கார்ட் முக்கியம்னு எழுதி பதிவும் பண்ணருக்காங்க.

மேலும் மேட்ச் நடக்குற இடத்துல அங்க அவங்களுக்கு சில முறை சாப்பாடு பிரச்சனை ஏற்படுவதால் சோறு முக்கியம் அப்டினும் காதணி விழாவுக்கு வரவங்களுக்கும் சோறு முக்கியம் அப்படிங்கற மாதிரியும் அதுக்கும் இதுக்கும் ஒரு லிங் பண்ணி விட்டுருக்காங்க. சரி அதுக்கு ஏன் முழு ஆதார் கார்டையும் அச்சடிச்சு வச்சிருக்கீங்கனு அந்த ஊர் இளைஞர்கள்கிட்ட விசாரிச்சப்ப, “ப்ரோ மேட்சுக்கு போறப்ப ஆதார் கார்ட மறந்துட்டு போயிடுரோம். அதுனால சில சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கு. அதான் இனிமே காலத்துக்கும் மறக்க கூடாதுனு பேனர்லயே பதிவு பண்ணிட்டோம்” அப்படினு சொல்றாங்க.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

என்னையா புது புதுசா பண்ணுறீங்கனு கேட்பதற்குள்ள, “ப்ரோ இது பார்த்தா காமெடியா இருந்தாலும் எங்கள மாறி கபடில அதிகமா கலந்துக்குற பசங்களுக்கு தான் ப்ரோ எங்களோட வலியும் வைதனையும் புரியும்” அப்படினு சொல்றாங்க. உண்மையிலேயே ரத்தம் முழுவதும் கபடி வெறி ஊரி போன ஒருதனாலதான் இப்படி பண்ணமுடியும். இத பார்த்தா ரோட்ல போற பலர் இது என்னன்னு தெரியாமலேயே ரொம்ப நேரமா பாத்துருக்காங்க. இது சம்பந்தமான வீடியோஸ் தற்போது சோசியல் மீடியால பயங்கரமா ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

First published:

Tags: Local News, Thanjavur