போகி பண்டிகையை முன்னிட்டு மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், \" பொங்கல் பண்டிகையை மாசு இல்லாத வகையில் கொண்டாட வேண்டும். பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் வரும் போகிப் பண்டிகை கொண்டாட்டத்தில் சில இடங்களில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற கழிவுகளுடன் தற்சமயம் டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற செயற்கை பொருட்களையும் சேர்த்து எரிப்பது ஒரு சிலரால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் நச்சு புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படுகின்றன. தவறுதலாக ரசாயன பொருட்கள், பேட்டரி, வெடிக்கும் அபாயம் உள்ள பொருட்களை தீயிட்டு கொளுத்தும் போது அவற்றில் இருந்து நச்சுத்தன்மை கொண்ட புகையினால் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
எனவே அபாயம் உள்ள கழிவுகளை எக்காரணம் கொண்டும் தீயிட்டு எரிக்க கூடாது. வீடு அல்லது நிறுவனங்களில் தேங்கி கிடக்கும் கழிவு பொருட்களை வருகிற 14ஆம் தேதி (சனிக்கிழமை) வரை தரம் பிரித்து நகராட்சி பணியாளர் வசம் ஒப்படைக்க வேண்டும்.
பொது இடங்களில் பிளாஸ்டிக் பைகளை வீசி எரிவதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மறுசுழற்சி கழிவுகளான டயர், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து கழிவினை காசாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை சுகாதார கோட்டங்களில் பொதுமக்கள் நேரடியாகவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் நேரடியாக வீட்டிற்கு வந்து பெற்றுக் கொள்ளவும் தனியாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Must Read : வால்பாறை பகுதிக்கு சுற்றுலா போறீங்களா? - உங்களுக்கு வனத்துறை விடுத்துள்ள முக்கிய அறிவுரை!
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு நகராட்சி ஆணையர், துப்புரவு ஆய்வாளர், துப்புரவு அலுவலரை தொடர்பு கொள்ளவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bhogi, Local News, Pongal 2023, Thanjavur