ஹோம் /தஞ்சாவூர் /

பொன்னியின் செல்வன் படம் பார்க்க தஞ்சை வந்த சின்ன பழுவேட்டரையர்.. படம் எப்படி இருக்கு?

பொன்னியின் செல்வன் படம் பார்க்க தஞ்சை வந்த சின்ன பழுவேட்டரையர்.. படம் எப்படி இருக்கு?

பொன்னியின்

பொன்னியின் செல்வன்

Ponniyin Selvan Movie Review | சோழ தேசத்திற்கு வந்து பொன்னியின் செல்வனை பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது, படம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் வரவில்லை படத்தை சோழ மக்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்று பார்க்க தான் வந்தேன் - நடிகர் பார்த்திபன்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

மணிரத்னம் இயக்கி முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வம் படம் இன்று வெளியாகி இருக்கும் சூழலில், தஞ்சை வரலாற்றை அடிப்படையாக கொண்ட இந்த படம் குறித்து தஞ்சை மக்களின் கருத்தை அறிந்துகொள்வோம்.. 

கல்கியின் பொன்னியின் செல்வன் படத்தை பல ஜாம்பவான்களும் முயற்சி செய்து முடியாத நிலையில், இயக்குநர் மணிரத்னம் அதை சாதித்துக் காட்டி உள்ளார். தமிழர்களின் பொற்கால ஆட்சி என்று சொல்லப்படும் ராஜ ராஜ சோழனின் ஆட்சி நடப்பதற்கே முக்கியமான காரணமாக அமைந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே பொன்னியின் செல்வன் கதை உருவானது.

சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரபு, விக்ரம் பிரபு, சோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த பிரம்மாண்ட படம் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? சோழ தேசத்திற்கு தஞ்சை மக்களுடன் சேர்ந்து படம் பார்க்க வந்த நடிகர் பார்த்திபன் என்ன சொல்கிறார் என்று பார்கலாம்..

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு நிச்சயம் முழு கதையும் தெரிந்திருக்கும். ஆனால், பொன்னியின் செல்வன் நாவலை படிக்காதவர்களுக்கும் புரியும் வகையில் படத்தை இயக்கி உள்ளார் இயக்குநர் மணிரத்னம்.  

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

படத்தை பார்த் சின்ன பழுவேட்டரையர் கூறுகையில் (பார்த்திபன்):

சோழ தேசத்திற்கு வந்து பொன்னியின் செல்வனை பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது, படம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில்

வரவில்லை படத்தை சோழ மக்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்று பார்க்க தான் வந்தேன். மேலும் கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு பெண் ரசிகர்கள் அதிகம் உள்ளது.. பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு பெரிய கோயில் சென்று, சோழனையும் சிவனிடம் ஆசிர்வாதம் வாங்க உள்ளேன் என்று கூறினார்.

Published by:Arun
First published:

Tags: Entertainment, Local News, Ponniyin selvan, Thanjavur