தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் நிசும்ப சூதணி அம்மன் (பத்ரகாளி கோயில்) உள்ளது. இக்கோயில் சோழ மன்னர்களின் போர் தெய்வமாகவும், இஷ்டதெய்வமாகவும் விளங்கியுள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோயிலில் தை மாதம் 3ம் வெள்ளி தினத்தையொட்டி அம்மனுக்கு பால்குடம் காவடி திருவிழா நடைபெற்றது. தை மாதம் 1ம் தேதி முதல் காப்பு கட்டி அம்மனுக்கு தொடர்ந்து 2 வாரம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, 3ம் வெள்ளியில் காலை தொடங்கிய திருவிழானது காளி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு கீழவாசல் பகுதியை சேர்ந்த பக்தர்கள் 50க்கும் மேற்பட்டோர் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தினர்.
பின்னர் தீச்சட்டி எடுத்து, சிவன், காளி ஆட்டம், ஆட செண்டை மேளம் முழங்க, நாதஸ்வரம், மேளம் வாசிக்க வான வேடிக்கைகளுடன் கீழவாசல் வெள்ளை பிள்ளையார் கோயிலில் தெருவில் தொடங்கி, மார்க்கெட் சாலை, டபிள்குளம் சாலை, பூமரத்தான் கோயில் தெரு, ஒத்த வாரக்கார தெரு, பிள்ளையார் கோயில் வாரக்கார தெரு, இரட்டை வாரக்காரத்தெரு ஆகிய பகுதிகளில் முழுவதும் சென்று ஆட்டம் பாட்டத்துடன் இரவு 10 மணிக்கு கோயிலை அடைந்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பிறகு பத்ரகாளி அம்மன் சன்னதியில் செண்டை மேளம், நாதஸ்வரம், மங்கல மேளம் வாசித்த பின்னர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்த விழாவால் தஞ்சை கீழவாசல் பகுதி முழுவதும் நேற்று விழாக்கோலம் பூண்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur