ஹோம் /தஞ்சாவூர் /

அரசுப் பள்ளிக்கு பேருந்து வழங்கிய கிராம மக்கள்.. தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் தஞ்சாவூர் பூவத்தூர் அரசு பள்ளி..!

அரசுப் பள்ளிக்கு பேருந்து வழங்கிய கிராம மக்கள்.. தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் தஞ்சாவூர் பூவத்தூர் அரசு பள்ளி..!

X
அரசு

அரசு பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வழங்கிய கிராம மக்கள்

Thanjavur Orathanadu Poovathur Government School : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, கிராம மக்கள் ரூ.13 லட்சம் மதிப்பில் பள்ளி பெயரில் வேன் வாங்கி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Orathanadu (Mukthambalpuram), India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள பூவத்தூரில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பூவத்தூர், பேய்கரம்பன்கோட்டை, பாளமுத்தூர், குடிக்காடு, தெலுங்கன்குடிக்காடு, திருமங்கலக்கோட்டை, மேலையூர், கக்கரை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 190 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊராட்சி தொடக்கப் பள்ளி, மழலையர் ஆங்கிலப் பள்ளியில் 185 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பூவைகல்வி வளர்ச்சி குழு மற்றும் பொது நல அறக்கட்டளை என்ற பெயரில், பூவத்தூர் கிராம இளைஞர்கள், கிராம மக்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், முன்னாள் மாணவர்கள் என 150க்கும் மேற்பட்டோர் பள்ளியின் வளர்ச்சியில் பங்கெடுத்து வருகின்றனர்.  மேலும், அவர்கள் பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கிராம மக்கள் மற்றும் பூவை கல்வி வளர்ச்சிக் குழு மற்றும் பொது நல அறக்கட்டளை சார்பில், பள்ளிக்கு ரூ.13 லட்சம் செலவில் வேன் வாங்கி வழங்கினர். இதுகுறித்து பூவை கல்வி வளர்ச்சி குழு நிர்வாகிகள் கூறும்போது, “எங்கள் பள்ளி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை கிராம மக்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து செய்து வருகிறோம். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், ஆங்கில வழியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுத்தோம். எங்கள் குழுமூலம் 8 ஆசிரியர்களை நியமித்துள்ளோம். இதனால் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது,” என்றனர்.

First published:

Tags: Local News, Orathanadu, Thanjavur