ஹோம் /தஞ்சாவூர் /

வயலில் இறங்கி நெல் நாற்றுகளை நடவு செய்த தஞ்சை மாணவர்கள்.. விவசாயத்தின் மகத்துவத்தை புரியவைக்கும் விவசாயிகளின் நடவு திருவிழா..

வயலில் இறங்கி நெல் நாற்றுகளை நடவு செய்த தஞ்சை மாணவர்கள்.. விவசாயத்தின் மகத்துவத்தை புரியவைக்கும் விவசாயிகளின் நடவு திருவிழா..

வயலில்

வயலில் நடவு நடும் மாணவர்கள் 

Thanjavur Latest News | தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கருப்பட்டிபட்டி கிராமத்தில் மாணவர்களுக்கு விவசாயம் குறித்து புரிதலை ஏற்படுத்தும் நடவு நடும் விழா.. உணவுப் பொருள்களை வீணாக்க மாட்டோம் என உறுதிமொழியேற்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள செல்லம்பட்டியை அடுத்த கருப்பட்டிபட்டியில், விவசாயம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலான நெல் நடவு விழா நடைபெற்றது.

உலக உணவு தினத்தை யொட்டி, 'விதையால் ஆயுதம் செய்' -விவசாய மற்றும் சுற்றுச் சூழல் அமைப்பு சார்பில் நடை பெற்ற இந்த விழாவுக்கு கால்நடை மருத்துவ பேராசிரியர் என். புண்ணியமூர்த்தி, சுற்றுச்சூ ழல் செயற்பாட்டாளர் கோ. மு ரளி, பாரம்பரிய நெல் சேகரிப்பா ளர்பசுமை எட்வின்,கல்வியாளர் கள் ஏ.வி.நடனசிகாமணி, கே. சாமிநாதன், திரைப்பட இயக்குநர் ராசி. மணிவாசகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில்,  நம்மாழ்வார் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற தனித்திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பின்னர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்திலிருந்து மாணவ, மாணவிகள் ஊர்வலமாக அருகேயுள்ள வயல் பகுதிக்கு அங்கு விவசாயி தவச்செல்வனின் வயலில் பாரம்பரிய நெல் 'தங்கச்சம்பா நெல் நாற்றை நடவு செய்தனர். அப்போது, நெல் சாகுபடி குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. தொடர்ந்து, உணவுப் பொருள்களை வீணாக்க மாட்டோம் என உறுதிமொழியேற்கப்பட்டது.

ஏற்பாடுகளை இயற்கை விவசாயி தவச்செல்வன் மற்றும் கிராம விவசாயிகள் இணைந்து செய்திருந்தனர். நிகழ்வை இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் யாழினி தொகுத்து வழங்கினார். முன்னதாக, இளம் சுற்றுச்சூ ழல் செயற்பாட்டாளர் தமிழினி யாள் வரவேற்றார்.

நிகழ்வில் வடக்கூர், பாச்சூர், கருப்பட்டிபட்டி, வெட்டிக்காடு ஆகிய ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 170 -க்கும்‌ மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இது குறித்து இது குறித்து விவசாயி தவச்செல்வன் கூறுகையில்:

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மாணவர்கள் நடவு நடும் விழாவை நடத்தி வருகிறோம். இது மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் அதன் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வதற்காக இந்த விழாவானது நடத்தினோம்... ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவை நடத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். மாணவர்களுக்கு இந்த இயற்கை விவசாயத்தை பற்றி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள்  வைத்துள்ளார்..

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur