ஹோம் /தஞ்சாவூர் /

மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் வயல் வரப்புகளில் தடுமாறும் மக்கள். தஞ்சையில் அவலம்..

மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் வயல் வரப்புகளில் தடுமாறும் மக்கள். தஞ்சையில் அவலம்..

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

Thanjavur Latest News | தஞ்சாவூர் மாவட்டத்தில் மயானத்திற்கு சாலை வசதி இல்லாததால் வயல் வரப்புகளில் பொதுமக்கள் தடுமாறி செல்லும் அவல நிலை உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அருகே உள்ள சின்னமங்குடி ஊராட்சியை சேர்ந்த லெட்சுமி புறத்தில் தெருக்களுக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் லட்சுமிபுரத்தை சேர்ந்த பொது மக்களுக்கு இந்த வழியே மயானத்திற்கு செல்லும் பாதையும் கூட சுமார் 1.25 கிலோமீட்டர் தூரம் இருக்கும் இந்த வழியில் மயானத்திற்கு செல்லும் பாதை முழுவதுமாக வயல்வெளி வரப்புகளில் உள்ளது. இதில் பாதியிலேயே மயானத்திற்கு செல்வதற்கான பாதையும் சரி வரை இல்லாமல் இருக்கிறது.

இதனால் பல ஆண்டுகளாக இப்பகுதி சேர்ந்த மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில்லாத பகுதி முழுவதும் தண்ணீரால் நிரம்பி சேரும் சகதியுமாக இருக்கிறது. மயானத்திற்கு செல்லும் பாதையை சீரமைத்து சாலை வசதி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க:  தஞ்சை பெரிய கோவிலில் இத்தனை பிரபலங்களின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளதா?

மேலும் இது குறித்து சின்னமன்குடி ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில்:

நான் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ளது இந்த இரண்டு ஆண்டுகளாகவும் நான் தொடர்ந்து பல மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை அளித்துள்ளேன் நிதி. வரவில்லை ஏற்கனவே போடப்பட்ட சாலையை சீரமைப்பதற்கு மட்டுமே நிதி உள்ளதாகவும் புது சாலை அமைப்பதற்கான நிதி தற்போது வரவில்லை என்று கூறுகின்றனர். நானும் பலமுறை முயற்சித்து வருகிறேன் என்று கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur