Home /thanjavur /

Thanjavur | அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு

Thanjavur | அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு

தஞ்சாவூர் பள்ளி

தஞ்சாவூர் பள்ளி

Thanjavur | ஓரத்தநாட்டிலுள்ள அரசுப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பானது நடைபெற்றது. இதில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு' தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் நடந்தது. இந்த பள்ளி மேலாண்மை குழு எனபது பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயர் மாற்றப்பட்டு நடப்பு கல்வியாண்டிலிருந்து அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் பெற்றோரின் பெரும் பங்களிப்புடன் செயல்படவுள்ளது.

இருபது பேர் உடைய குழுவில், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஒருவர், மக்கள் பிரதிநிதிகள் இருவர், ஓய்வு பெற்ற கல்வியாளர் ஒருவர் என ஐந்து பேர் உறுப்பினராக இருக்க வேண்டும். எஞ்சிய 15 பேரும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோராக இருக்க வேண்டும்.

மேலாண்மை குழுவில், 80 சதவீதம் பேர் 'பெண்கள் இடம் பெற வேண்டும்' என்ற அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்த உறுப்பினர் தேர்வானது நடந்தது.

இந்நிலையில் ‌நேற்று முன்தினம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பானது நடந்தது.

அரசுப் பள்ளி கூட்டம்


இக்கூட்டத்தில் தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பொருளாளர், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பார்வையாளராக பங்கேற்று வெளிப்படையான, ஜனநாயகமான முறையில் மறு கூட்டமைப்பு நிகழ்வை நடத்த உதவினர்.

இத்தேர்வில் பாச்சூர் பள்ளியில் தலைவராக தலைமை ஆசிரியரும், துனை தலைவராக பஞ்சாயத்து உறுப்பினர்கள் இருவரும் மற்றும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் 15 பேர் உறுப்பினர்களாகவும், என மொத்த 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் தானாக முன்வந்து பொறுப்பினை ஏற்றுகொண்டனர். பின்பு உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து அனைவருக்கும் விவரிக்கப்பட்டது.

பின்பு பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களின் பெற்றோர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டு CEO விற்கு அனுப்பப்பட்டது. இதில் பெற்றோர்களில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி