முகப்பு /தஞ்சாவூர் /

கொளுத்தும் வெயில்.. தஞ்சை மக்களின் தாகத்தை தீர்க்கும் நுங்கு!

கொளுத்தும் வெயில்.. தஞ்சை மக்களின் தாகத்தை தீர்க்கும் நுங்கு!

X
நுங்கு

நுங்கு விற்பனை அமோகம்

Thanjavur nungu sale | தஞ்சாவூரில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பொதுமக்கள் நுங்கு கடைகளை நாடி செல்கின்றனர்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் நுங்கு, விற்பனை சூடு பிடித்து வருகிறது. 

தஞ்சையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது இந்நிலையில் தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவியதால் தஞ்சையிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் இளநீர், தர்பூசணியை போல நுங்கு விற்பனையும் பாதிக்கப்பட்டது.

மேலும் வழக்கம் போல சித்திரை மாதத்தில் இருக்கும் வெயிலின் தாக்கமானது இந்த ஆண்டு சற்று குறைவாகவே இருந்தது. தற்போது வைகாசி மாசம் தொடங்கிய நிலையில் தஞ்சையில் மீண்டும் வெயில் சுட்டெரித்து வருகிறது. எனவே இதன் காரணமாக நுங்கு விற்பனை தற்போது அமோகமாக நடந்து வருகிறது மேலும் பலர் ஆர்வத்துடன் நுங்கினை வாங்கி செல்கின்றனர்.

மேலும் இதுகுறித்து இது குறித்து நுங்கு வியாபாரிகள் கூறுகையில், மரங்களை குத்தகைக்கு எடுத்து தான் நுங்குகளை விற்பனை செய்து வருகிறோம். ஒரு நாளைக்கு 1500 ரூபாய் வரை கிடைக்கிறது இதில் செலவுகள் போக 700 ரூபாய் தாராளமாக கிடைக்கிறது. மேலும் கடந்து சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. தற்போது மீண்டும் வெயிலின் தாக்கம் தொடங்கியதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் நுங்குகளை வாங்கி செல்கின்றனர் என்று கூறினர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Summer tips, Thanjavur