ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு.!

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு.!

தஞ்சையில் மின்தடை அறிவிப்பு

தஞ்சையில் மின்தடை அறிவிப்பு

Tanjore District News : தஞ்சை நகர  துணை மின் நிலையத்தில், அவசர கால பராமரிப்பு பணிகள் நடப்பதால் கீழ் கண்ட இடங்களில் மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரை மின் தடை ஏற்படுகிறது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவித்துள்ளது.

தஞ்சை நகர துணை மின் நிலையத்தில், அவசர கால பராமரிப்பு பணிகள் நடப்பதால் கீழ் கண்ட இடங்களில் மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படுகிறது.

மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதையும் படிங்க : மழை பெய்யுதே.. ரெயின் கோட் போட்டு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்... தஞ்சாவூரில் சுவாரஸ்ய சம்பவம்!

இதனால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் இடங்கள் :

அண்ணாநகர் மின்பாதையில் இருந்து மின் வினியோகம் பெறும் அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர் ஆகிய பகுதிகளிலும், மேரீஸ் கார்னர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் திருச்சி சாலை, வ.உ.சி. நகர், பூக்கார தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம் ஆகிய பகுதிகள்.

இதேபோல், மங்களபுரம் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ. நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், ஆகிய பகுதிகள்.

மேலும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து மின்வினியோகம் பெறும் எஸ்.இ. ஆபிஸ், கலெக்டர் பங்களா சாலை, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ் போஸ் நகர், தென்றல் நகர், துளசியா புரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி ஆகிய பகுதிகள்.

இதையும் படிங்க : மது கொடுத்து 16வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. திருச்சியில் பயங்கரம்

நிர்மலா நகர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நட்சத்திராநகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர் ஆகிய பகுதிகளிலும், யாகப்பாநகர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் யாகப்பா நகர், அருளானந்த அம்மாள்நகர், குழந்தை ஏசு கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த இடங்களில் மின் தடை ஏற்படும் என்று தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore