சமீபகாலமாக வடமாநிலத்தவர்கள் அதிகளவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி படையெடுக்கின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கட்டிட வேலை, டீ கடை, துணிகடை, போன்ற கிடைக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் பாரம்பரிய தொழிலை மையப்படுத்தி தங்களது பொருளாதாரத்தை உயர்த்தி கொள்கின்றனர்.
அந்த வகையில்தஞ்சாவூர்கொண்டிராஜபாளையம் சாலை யோரத்தில் இரும்பு பட்டறை தொழிலை பரம்பரை, பரம்பரையாக செய்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் முகாமிட்டுள்ளனர்.
இரும்பு பட்டரை:
அவர்கள் இரும்பு பட்டைகளை சூடேற்றி அவை இளகியவுடன் சம்மட்டியால் அடித்து, அதற்கு ஏற்ற வடிவம் கொடுக்கின்றனர். பின்னர் தங்கள் கைவண்ணத்தில் உருவான இரும்பு கருவிகளான அரிவாள், கோடரி, கத்தி உள்ளிட்டவற்றை அங்கு தரையில் பரப்பி வைத்து விற்பனை செய்கின்றனர்.
அரிவாள்-கோடரி அரிவாள் உள்ளிட்ட கருவிகள் வெளிப்படையாக செய்வதால் அந்த வழியாக செல்வோர் பலர் வாகனங் களை நிறுத்தி கருவிகளைஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். ஒருசிலர் இரும்பு கருவிகளை செய்வதை வேடிக்கையும் பார்க்கிறார்கள்.
இதுகுறித்து வடமாநில தொழிலாளர் கள் கூறுகையில்:, “நாங்கள் வயிற்று பிழைப்புக்காக தமிழகம் வந்தாலும், பாரம்பரிய தொழில் அழிந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். மத்திய பிரதேசத்தை காட்டிலும் தமிழக மக்கள் அதிக ஆர்வமுடன் இரும்பு கருவிகளை வாங்கவும், பட்டை தீட்டவும் செய்கின்றனர்.
ஒரு நாளைக்கு வருமானமாக 1,500 ரூபாயும் கிடைக்கும், சில நாள் அதுவும் கிடைக்காது... இதற்கு தேவையான கரி கட்டை, இரும்பு பொருட்களை அருகில் உள்ள கடைகளில் வாங்குகிறோம்.. செலவுகள் போக 600 வரை வருமானம் கிடைக்கிறது.. எங்க ஊரில் இதுவும் கிடைக்காது..
நாங்கள் 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை ஒரு இடத்தில் முகாமிடுகிறோம்.பின்பு மற்றொரு கிராமத்துக்கு செல்வோம். கிராமப்புறங்களில் தான் இரும்பு கருவிகளின் பயன்பாடு அதிகளவில் இருக்கும். நாங்கள் தயார் செய்யும் அரிவாள்- ரூ.350, பெரிய கோடரி-ரூ.650, சிறிய கோடரி-ரூ.450. இறைச்சி வெட்ட பயன்படுத்தும் கத்தி- ரூ.200, ரூ.100, களைவெட்டும் கருவி- ரூ.200, ரூ.400, உளி-ரூ.100, தொரட்டியில் கட்டப்படும் சிறிய அரிவாள்- ரூ.100 என்ற விலைகளில் விற்பனை செய்கிறோம் என்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur