ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் பண மோசடி புகார் அளிக்காதவர்கள் ஆவணங்களுடன் வருமாறு அழைப்பு

தஞ்சாவூரில் பண மோசடி புகார் அளிக்காதவர்கள் ஆவணங்களுடன் வருமாறு அழைப்பு

பண மோசடி

பண மோசடி

Thanjavur News | தஞ்சாவூரில் இரு மடங்கு தொகை தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து புகார் அளிக்கலாம் என தஞ்சை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

பண மோசடி செய்ததாக தஞ்சாவூரில் 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டு இதுவரை புகார் அளிக்காதவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து புகார் அளிக்கலாம் என தஞ்சை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் சவுகத் அலி. இவருடைய மகன் முகமது யூத சவுகத் அலி ஜபருல்லா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்தபொழுது இவரது மனைவியிடம் முதலீட்டுக்கு கவர்ச்சிகர இரு மடங்கு தொகை தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அதே பகுதியை சேர்ந்த கணேசன், சுவாமிநாதன் மற்றும் 8 பேர் கடந்த 2020ஆம் ஆண்டு ரூ.15 கோடியே 4 ஆயிரத்தை ரொக்கமாக வங்கி கணக்கு மூலமாகவும், நேரடியாகவும் பெற்றுள்ளனர்.

Must Read :திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

பின் முதலீடாக பெற்ற தொகையில் இருந்து ரூ.1 கோடியே 79 லட்சத்து 31 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளனர். மீதமுள்ள ரூ.13 கோடியே 24 லட்சத்து 69 ஆயிரத்தை திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இதே போன்று ஏமாற்றப்பட்ட 39 நபர்கள் கொடுத்த புகாரின் படி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 39 வழக்குகள் பதிவு செய்து மேற்கண்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது வழக்கானது திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டப்படி விசாரணைக்கு எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே இதுவரை புகார் கொடுக்காதவர்கள் அசல் ஆவணங்களுடன் தஞ்சை ராஜப்பா நகரில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரில் வந்து புகார் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Police, Thanjavur