ஹோம் /தஞ்சாவூர் /

நியூஸ் 18 உள்ளூர் செய்தி எதிரொலி- தஞ்சை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் 

நியூஸ் 18 உள்ளூர் செய்தி எதிரொலி- தஞ்சை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் 

X
தஞ்சை

தஞ்சை பள்ளி மாணவர்கள்

தஞ்சாவூரில் கைகளைப் பயன்படுத்தாமல் கண்களாலேயே கட்டுப்படுத்தும் மென்பொருள் கண்டுபிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

நியூஸ் 18 உள்ளூர் செய்தி எதிரொலியாக மாணவர்களின் புது விதமான கண்டுபிடிப்பிற்கு பாராட்டு விழா வைத்த நிலையில் நியூஸ் 18 உள்ளூர் செய்திக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பங்கேற்றநிலையில் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12 வகுப்பு படித்து வரும் கிஷோர் மற்றும் மாரிமுத்து ஆகிய இரண்டு மாணவர்களும் இந்த அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.

இதில் இவர்கள் கணிப்பொறியை தொடாமலேயே கண்ணாலேயே கட்டுப்படுத்தும் புது வித மென்பொருள் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து சிறப்பு அழைப்பாளர் பரிசையும் பெற்றிருந்தனர்.

இந்த ஒரு கண்டுபிடிப்பை பார்த்த பலரும் மாணவர்களுக்குபாராட்டுகளைத் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் மாணவர்களின் கண்டுபிடிப்பை வெளி கொண்டு வரும் வகையில் நியூஸ் 18 உள்ளூர் செய்தியில் கடந்த மாதம்செய்தி வெளியானது.தற்போது பட்டுக்கோட்டை மனோகர்இச்செய்தியை பார்த்து வியப்பில் ஆழ்ந்து மாணவர்களுக்கு பாராட்டு விழா வைத்துஅவர்களுக்குசிறந்த இளம் மென்பொருள் பொறியாளர் என்கிற விருதை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளார்.

செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.

First published:

Tags: Local News, Thanjavur