முகப்பு /தஞ்சாவூர் /

நியூஸ் 18 உள்ளூர் செய்தி எதிரொலி.. ஆபத்தான நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றம்..

நியூஸ் 18 உள்ளூர் செய்தி எதிரொலி.. ஆபத்தான நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றம்..

X
அகற்றப்பட்ட

அகற்றப்பட்ட நீர்தேக்க தொட்டி

தஞ்சை அருகே கீழே விழும் நிலையில் உள்ள நீர் தேக்க தொட்டியால் பள்ளி மாணவர்களுக்கு அபாயம்... என நியூஸ் 18 உள்ளூர் பக்கத்தில் செய்தி வெளியிட்டது அதன் எதிரொலியாக தற்போது அந்த மேல் நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டுள்ளது..

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை ஊராட்சி சிவகாமிபுரத்தில் தொடக்கப்பள்ளி அருகில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஒன்று இருந்தது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தொட்டியின் பில்லர்கள் உடைந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பொதுமக்களின் தொடர் கோரிக்கையாள் பள்ளி அருகிலேயே புதிய தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கும் வந்தது.

அகற்றப்பட்ட நீர்தேக்க தொட்டி

இந்நிலையில், பழைய நீர் தேக்கத்தொட்டியை இடித்து அப்புறப்படுத்தாமலேயே இருந்தது. எனவே தொட்டி எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயமும் உள்ளது. இதன் அருகிலேயே தொடக்கப்பள்ளி உள்ளதால் பள்ளி விடுமுறை நாட்களிலேயே இதை செய்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எனவே இதுதொடர்பாக நியூஸ் 18 உள்ளூர் பக்கத்தில் இதை செய்தியாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில், செய்தி வெளியிட்ட 2 நாட்களிலே ஆபத்தான நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்‌.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tanjore