ஹோம் /தஞ்சாவூர் /

Pongal 2023 : பொங்கல் பண்டிகைக்கு தஞ்சையில் காய்கறி விலை கிடு கிடு உயர்வு 

Pongal 2023 : பொங்கல் பண்டிகைக்கு தஞ்சையில் காய்கறி விலை கிடு கிடு உயர்வு 

தஞ்சை

தஞ்சை

Vegetable Prices : பொங்கல் பண்டிகைக்கு நெருங்கிய நிலையில் தஞ்சையில் கிடு கிடுவென உயர்ந்த காய்கறி விலை. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் காமராஜர் காய்கறி மார்க்கெட் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அத்துடன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதேபோல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கே காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இங்கே மொத்தவிலை வியாபாரிகளிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி, தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக எடுத்துச்செல்வது வழக்கம்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால், பொங்கல் பண்டிகைக்காக புதுமணத் தம்பதியினருக்கும் மற்றும் திருமணமான பெண்களுக்கும் பெற்றோர்கள், சகோததர்கள் சீர்வரிசை கொடுப்பது வழக்கம். இந்த சீரில் கரும்பு, வாழைத்தார், பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவையும் இடம்பெறுவது வழக்கம். அவ்வாறு வாங்கும் வாடிக்கையாளர்களால், தற்போது காய்கறிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும், காய்கறிகள் விளைச்சல் குறைவாகவே இருப்பதால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல மற்ற காய்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ கணக்கில்) - தக்காளி ரூ.25; முருங்கைக்காய் ரூ.120; கத்தரிக்காய் ரூ.40 முதல் ரூ.80 வரை; அவரைக்காய் ரூ.50; வெண்டைக்காய் ரூ.60; பீன்ஸ் ரூ.40; கேரட் ரூ.40; பாகற்காய் ரூ.50; இஞ்சி ரூ.40; சின்ன வெங்காயம் ரூ.70 முதல் ரூ.100 வரை; பெரியவெங்காயம் (பல்லாரி) ரூ.20 முதல் ரூ.30 வரை; கோவக்காய் ரூ.40; பீட்ரூட் ரூ.45; பச்சை மிளகாய் ரூ.40; வெள்ளரிக்காய் ரூ.30; குடைமிளகாய் ரூ.70; முட்டைக்கோஸ் ரூ.15; காலிபிளவர் ரூ.40; உருளைக்க்கிழங்கு ரூ.30, பரங்கிக்காய் ரூ.20 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

First published:

Tags: Local News, Pongal 2023, Tanjore