முகப்பு /தஞ்சாவூர் /

குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த நயன்தாரா விக்னேஷ் சிவன்..! 

குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த நயன்தாரா விக்னேஷ் சிவன்..! 

X
குலதெய்வ

குலதெய்வ வழிபாட்டில் நயன்தாரா விக்னேஷ் சிவன் 

Nayanthara - Vignesh Sivan at Thanjavur | தஞ்சாவூர்மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் தங்களின் குழந்தைகளுக்காக வழிபாடு செய்துள்ளனர் நட்சத்திர தம்பதியரான நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. 

  • Last Updated :
  • Thanjavur, India

நடிகை நயன்தாரா தனது காதல் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் தஞ்சை மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்தார்.

தமிழ் சினிமாவின் உச்சநடிகையான நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும் பிரமாண்டமான முறையில் குடும்பத்தார் மற்றும் தமிழ் திரையுலக முக்கிய நட்சத்திரங்கள் முன்னிலையில் திருமணம் செய்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நயன் - விக்கி தம்பதியருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளின் முகம் காட்டாமல் குடும்ப புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், தஞ்சாவூரில் உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயிலில் இருவரும் வழிபாடு செய்துள்ளனர்..

குலதெய்வ கோயில்:

தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தான் நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவில் என சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு முன் இருவரும் இந்த கோவிலுக்கு வந்த நிலையில், தற்போது இருவரும் மீண்டும் இன்று (ஏப்ரல் 5)கோவிலுக்கு வந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    நயன் - விக்கி வருகையை ஓட்டி காமாட்சி அம்மனுக்கு பால். தயிர் சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நொண்டி கருப்பு, முனியாண்டவர், மதுரைவீரன், அரியத்தங்கால் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு. தீபம் காட்டி இருவரும் பய பக்தியுடன் வழிப்பட்டனர். நயன் - விக்கி வருகையை அறிந்த ஊர் மக்களும், ரசிகர்களும் கோவில் வளாகத்தில் கூடியதால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

    First published:

    Tags: Local News, Thanjavur