இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக திகழும் நவராத்திரி பண்டிகை ஆண்டுதோறும் ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.. நவராத்திரி பண்டிகையில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது பிரதானமாக விளங்குகிறது. இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையானது செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடக்க இருக்கிறது.
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார், ஆண்டுதோறும் கொலு பொம்மைகள் கண்காட்சியினை நடத்தி வருகிறது.
பூம்புகார் நிறுவனமானது தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகம், கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்த பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டுகளைப் போலவே கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை 02.09.2022 அன்று தொடங்கி 06.10.2022 வரை (ஞாயிறு உட்பட) நடத்தப்பட உள்ளது.
கடந்த 05.09.2022 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இக்கண்காட்சியினை திறந்துவைத்தார் . இக்கண்காட்சியில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை பொருட்களினால் தயாரிக்கப்பட்ட கைவினை கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
என்னலாம் கிடைக்குது?
கொலுப்படி செட். கிரகப்பிரவேச செட், வேதமூர்த்திகள் அஷ்டதிக் பாலகர்கள், அஷ்ட பைரவர்கள், நவகிரகங்கள். அத்திவரதர் நின்ற கோலம், தசாவதாரம் செட், அஷ்டலெட்சுமி செட், விநாயகர் செட் குபேரன் செட், கிரிவலம் செட், திருமலை செட், கோபியர் செட், தர்பார் செட், மைசூர் தசரா செட், கிரிக்கெட் விளையாட்டு செட், சங்கீத மும்மூர்த்திகள் செட், கருட சேவை செட், வைகுண்டம் செட். துர்கா பூஜை செட், அஷ்ட வராகி செட், நவதுர்க்கை செட். பூதகணங்கள், கிருஷ்ணர் விளையாட்டு செட் போன்ற சிறப்பான செட் பொம்மைகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ராஜஸ்தான். கொல்கத்தா, புனே, புதுடெல்லி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் தருவிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு பொம்மைகளாக கல்கத்தா களிமண் பொம்மைகள், சென்னப்பட்டினா மர பொம்மைகள், ஒட்டிகோப்பா பொம்மைகள், டிரஷிங் டால்ஸ் போன்ற புதிய விற்பனையில் இடம் பெற்றுள்ளன. வகை பொம்மைகளும், விற்பனையில் இடம்பெற்றுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த கண்காட்சி தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. பொம்மைகள் ஆரம்ப விலையாக 10-ரூ லிருந்து 10 ஆயிரம்- ரூ விற்கப்படுகிறது மேலும் வாங்கும் பொம்மைகளுக்கு 10% தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Navarathri, Thanjavur