தஞ்சை மேலவீதியில் உள்ள ‘இயற்கையின் தலைவன்’ என்ற உணவகம், பெயருக்கு ஏற்றார் போல, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலான இயற்கை சார்ந்த உணவு வகைகளை மட்டுமே வழங்கி வருவதால் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அஜினமோட்டோ, பிற ரசாயனங்கள், பல முறை பயன்படுத்திய எண்ணெய் போன்றவை ஏதுமின்றி அங்கேயே ஆட்டப்படும் மரச்செக்கு எண்ணெய் வகைகள், நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் தானிய உணவுகளுடன், இனிப்பு, கார வகைகளும் இங்கு கிடைப்பது சிறப்பாகும்.
14 வகையான தானிய தோசைகள், 6 வகையான தானிய இட்லி ரகங்கள், 15 மேற்பட்ட சட்னி வகைகள் இந்த உணவகத்தில் கிடைக்கின்றன. அங்கு பரிமாறப்படும் ஒவ்வொரு உணவின் மருத்துவ பயன்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

‘இயற்கையின் தலைவன்’ உணவகம்
12 வகையான மதிய உணவுகளும் மற்றும் வாரத்தில் ஏழு நாளில் தினமும் ஒவ்வொரு வகையான தினை பொங்கலும், மற்றும் தினமும் ஒவ்வொரு வகையான விஷாச உணவுகளும் கிடைக்கும். மாலை நேரங்களில் கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை பயன்படுத்தப்பட்ட 14க்கும் மேற்பட்ட தானிய பலகாரங்கள் மட்டுமின்றி பல வகையான தேநீரும் கொடுக்கப்படுகிறது.

‘இயற்கையின் தலைவன்’ உணவகம்
50க்கும் மேற்பட்ட தினை,தானிய வகையான இனிப்பு வகைகளும் கார வகைகளும் பல வகையான தினை பாணங்களும் கொடுக்கப்படுகிறது. இந்த உணவகத்தில் உணவு வகைகள் அனைத்தும் குறைந்த விலையில் கிடைப்பது ஏழை எளிய, நடுத்தர வர்க்கத்தினரை ஈர்த்து வருகிறது.

‘இயற்கையின் தலைவன்’ உணவகம்
இயற்கையின் தலைவர் உணவகம் குறித்து, அதன் நிறுவனர் மோகன் கூறுகையில், “தற்போதைய காலத்தில் மக்களிடையே உணவு குறித்த விழிப்புணர்வு அதிகம் கிடையாது. பரோட்டா போன்ற செரிமான சிக்கல்களை ஏற்படுத்தும் உணவுகளை அதிகம் மக்கள் சாப்பிடுகின்றனர். குறைந்த விலையில் கிடைக்கிறது என தினக்கூலிகள் இந்த உணவுகளை அன்றாடம் சாப்பிடுகின்றனர். இது போன்ற ஒரு நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இயற்கையான, பாரம்பரியமிக்க தானிய வகைகளை, மரச்செக்கு எண்ணெய் மூலம் தயாரித்து சுவையுடன் வழங்கி வருகிறோம்.

‘இயற்கையின் தலைவன்’ உணவகம்
தமிழகம் முழுவதும் இந்த இயற்கையின் தலைவன் உணவகத்தை நிறுவுவதே முக்கிய நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
"உணவே மருந்து" என்ற அடிப்படையில் நாம், நம் சந்ததிகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணினால் தற்போது நடைமுறையில் இருக்கும் உணவு முறையை மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை. அதனாலேயே இந்த இயற்கை உணவகத்தை விரும்பி வந்து உண்கிறோம் என்று உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர் பலர் கூறுகிறார்கள்.
உணவக முகவரி:
இயற்கையின் தலைவன் உணவகம்,
என்.எஸ்.சி போஸ் நகர்,
ஏபெக்ஸ் மருத்துவமனை எதிரில்,
தஞ்சாவூர்,
தொடர்புக்கு: மோகன் - 98948 17003

தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயற்கையின் தலைவன் உணவகத்திற்கு செல்லும் பாதையை காட்டும் வரைபடம்..
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.