சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ’வைகைப் புயல்’ வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் இன்று வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரமான நாய் சேகர் எனும் லீட் ரோலில் நடித்துள்ளார். இவரின் மகளாக விஜய் ஸ்டார் மற்றும் பாடகியான சிவாங்கி கிருஷ்ணகுமார் நடித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலாக ’எங்க அப்பத்தா’ பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்தது. இந்தப் பாடல் வரிகளை துரை, அசல் கோலர் இணைந்து எழுதியுள்ளனர். நடிகரும், பிரபல கொரியாக்ராஃபருமான பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.
இதையும் படிங்க : தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவில் குடியிருப்பை பெற்றவர்களுக்கு வட்டி சலுகை
இந்தியாவின் முதல் நாய் கடத்தும் நபர்' என ட்ரெய்லரில் அதகளமாக வடிவேலு அறிமுகமான நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த படம் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றது என்பதை தஞ்சையில் படம் பார்த்து வந்த ரசிகர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டோம் "படம் நல்லா இருக்கு. ஆனா காமெடி பெருசா வொர்க் அவுட் ஆகல” அப்படின்னும் சில பேர் சொல்றாங்க.
சிலர் “பழைய காமெடிகளை கலந்து எடுத்துள்ளதால் பெரிதளவில் டச் ஆகல” அப்படின்னும் சில பேர் சொல்றாங்க.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
“ஃபேமிலி என்டர்டைன்மென்ட்டா இருக்கும் கண்டிப்பா வந்து பார்க்கலாம். வடிவேலுக்கு இது கம் பேக் தான்” அப்படின்னு சில பேர் சொல்றாங்க. மொத்தத்துல இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த திருப்தியை கொடுக்கவில்லை என்றாலும், ஓரளவுக்கு நல்லா இருக்கு. அடுத்து வரும் வடிவேலு படங்களில் காமெடி எந்த அளவில் ஒர்க் அவுட் ஆகுது என்பதை இனி வரும் காலங்களில் தெரிந்து கொள்வோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore