முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சையில் மாலை பொழுதை மேலும் இனிமையாக்கும் இசை நடன நீரூற்று!

தஞ்சையில் மாலை பொழுதை மேலும் இனிமையாக்கும் இசை நடன நீரூற்று!

X
தஞ்சை

தஞ்சை அருங்காட்சியகத்தில் இசை நடன நீரூற்று 

Musical And Dancing Fountain In Thanjavur : தஞ்சையில் பொதுமக்களை வெகுவாக கவர்ந்த இசை நடன நீரூற்று.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் நகரின் மையப் பகுதியில் இருக்கும் பழமையான பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை பாதுகாத்து அருங்காட்சியமாக மாற்ற மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முடிவு செய்தார்.

அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்தது. கலெக்டர் முயற்சியால் இந்த அருங்காட்சியகம் புதுப்பொலிவு பெற்றது. கடந்த ஜனவரி மாதம் இந்த அருங்காட்சியகத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

இசை நடன நீரூற்று

இதில், வேளாண்துறை சார்பில் பழமையான வேளாண் கருவிகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் தலைக் காவிரி முதல் பூம்புகார் வரை காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளின் செயல்பாடுகள் குறித்த செயற்கை முறையில் தத்ரூபமான காட்சிகள், அரியவகை பறவைகள் பூங்கா 7டி திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நம் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி புதுப்பொலிவு பெற்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அருங்காட்சியகத்தில் கூடுதல் அம்சமாக குழந்தைகள் விளையாடி பொழுதை போக்குவதற்கு ரயில் சேவையும் மாலை பொழுதை இனிமையாக்க இசை நீருற்றும் ஆட்சியரால் தொடங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமானோர் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருங்காட்சியகத்திற்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: Local News, Thanjavur