ஹோம் /தஞ்சாவூர் /

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளம்... அவதிக்குள்ளாகும் தஞ்சை மக்கள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளம்... அவதிக்குள்ளாகும் தஞ்சை மக்கள்

முடப்படாத பள்ளம் 

முடப்படாத பள்ளம் 

Thanjavur District News: தஞ்சை மாநகரில் பரபரப்பாக இருக்கும் சாலையில் பள்ளங்கள் ஆங்காங்கே இருப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி முழுவதும் சாலைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது.  நாஞ்சிக்கோட்டை சாலையில் சாலைகள் சீரமைக்கப்பட்ட நிலையில் மேரிஸ் கார்னர் மற்றும் அண்ணா நகர் பகுதியில் ஆபத்தான பள்ளங்களை மூடாமலையே சாலையை போட்டுள்ளனர்.

நாஞ்சிக்கோட்டை சாலை ஆனது தஞ்சையில் மிகவும் முக்கிய சாலையாகும். காலை நேரங்களில் பள்ளி  வாகனங்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் என அதிகமாக செல்லும் பரபரப்பான சாலையாகும். இந்த சாலையில் உள்ள மேரிஸ் கார்னர் பகுதியில் நீளமான பள்ளம் ஒன்றும் கல்லுக்குளம் பகுதியில் ஆபத்தான பள்ளம் ஒன்றும் அண்ணா நகர் பகுதியில் ஆங்காங்கே பள்ளங்களும் ஏற்பட்டுள்ளது.

சாலையை போடும்போது இந்த பள்ளத்தை மூடாமல் அதை சுற்றி சாலையை போட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தப் பள்ளமானது நேற்று இன்று இல்லை இதில் சில பள்ளங்கள் பல மாதங்களாக இருத்து வரும் நிலையில் சாலையை சீரமைக்கும்போது இந்த பள்ளங்களை விட்டுவிட்டு சீரமைத்தது ஏன் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். காலை நேரத்தில் ரொம்பவே பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் பள்ளங்கள் ஆங்காங்கே இருப்பதால் விபத்துகளும்  ஏற்படுகிறது.

இதையும் படிங்க: "மழைதான் எங்க குலசாமி"- பருவ மழையை நம்பி விவசாய பணிகளை தொடங்கிய விராலிமலை விவசாயிகள்

இதுகுறித்து அப்பகுதி மக்கள்  கூறுகையில், “தஞ்சையில் பல இடங்களில் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் இந்த பள்ளங்களை மூடாமல் சாலையை போட்டது ஏன் இந்த சாலை வழியாக தான் அதிகாரிகளும் செல்கிறார்கள்  இதைப்பார்த்தும் கூட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சாதாரண பள்ளங்களை மூடுவதில் என்ன ஆகப்போகிறது. இதனால் நாங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றோம். தயவு செய்து இந்த சாலையில் உள்ள பள்ளங்களை முடிந்த அளவு விரைவில் சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Local News, Road accident, Thanjavur