Home /thanjavur /

தஞ்சாவூர் போறீங்களா... இந்த நவீன உணவு அருங்காட்சியகத்தை மிஸ் பண்ணாம பாருங்க

தஞ்சாவூர் போறீங்களா... இந்த நவீன உணவு அருங்காட்சியகத்தை மிஸ் பண்ணாம பாருங்க

அருங்காட்சியகத்திலுள்ள ஓவியம்

அருங்காட்சியகத்திலுள்ள ஓவியம்

இந்திய உணவுக் கழகத்தின் முதல் அருங்காட்சியகம் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. தஞ்சையில் இருப்போரும் அங்கே சுற்றுலா செல்பவர்களும் நிச்சயம் பார்த்து வியக்கவேண்டிய இடம் இது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
இந்தியாவில் முதன்முதலாக 1965ஆம் ஆண்டு தஞ்சாவூரில் இந்திய உணவுக் கழக அலுவலகம் தொடங்கப்பட்டது. பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படது. இதன் தொடர்ச்சியாக உணவு மேம்பாட்டில் பல்வேறு நிறுவனங்கள் இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டன.

மேலும் இந்திய உணவுக் கழகத்தின் முதல் அருங்காட்சியகம் தஞ்சாவூரில் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டு 2015 மத்திய அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் நாள் மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயலால் காணொளி காட்சி மூலம் இந்த அருங்காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது.

இங்கே, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் உணவுக்காக வேட்டையாடிது தொடங்கி இந்தியா, எகிப்து மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்ட உழவு கலப்பைகள், தானியக் களஞ்சியங்கள் உள்ளிட்ட பலவற்றை மெழுகு மற்றும் மரத்தாலான பொருள்களின் மூலம் வடிவமைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முற்கால மனிதர்களின் உணவு சேமிப்பு முறைகள் மற்றும் ஆரம்பகால மனிதன் எதிர்கொண்ட சவால்களையும்இங்கேஅறிந்து கொள்ளலாம்.

அருங்காட்சியகத்திலுள்ள ஓவியம்


கிராமங்களின் தோற்றம், விவசாய உற்பத்தி தொடர்பான வீடியோ காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரையிடப்படுகின்றன. முற்கால மனிதர்கள் பயன்படுத்திய உணவு தானியங்களின் நன்மைகள், அதில் உள்ள சத்துக்களின் தகவல்களை தொழில்நுட்ப வசதியுடன் திரையில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்திலுள்ள ஓவியம்


அங்கே வைக்கப்பட்டுள்ள வரைபடத்தில், எந்த மாநிலத்தின் மீது விரல் வைத்தாலும் அந்த மாநிலத்தின் முக்கிய உணவுவகை திரையில் தோன்றும், நம்மால் அதனை பார்த்து அறிந்து கொள்ளமுடியும். நிலத்தை உழுதல் பயிரிடுதல் தொடங்கி விளைபொருளை அறுவடை செய்து அரிசியாக்கிபயன்படுத்துவது வரையான சங்கிலித் தொடர் செயல்பாட்டை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் காட்சி படுத்தப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுக்கான வினாடி வினா வசதியும் பார்வையாளர்களை ஈர்க்குவகையில் உள்ளது. மேலும், இந்திய உணவுக் கழகத்தின்‌ தோற்றம் அதன் செயல்பாடுகள் பற்றிய காட்சிகளும் சிறிய திரைகளில் காண்டு அறியலாம்.

இந்த உணவு அருங்காட்சியகம் பள்ளி, கல்லூரிமாணவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தஞ்சாவூர் நிர்மலா நகரில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகத்தில்தான் இந்த உணவு அருங்காட்சியம் உள்ளது. திங்கள் முதல் சனி வரை வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி