முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சையில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

தஞ்சையில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

X
தஞ்சையில்

தஞ்சையில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி

Volleyball Tournament in Thanjavur | தஞ்சாவூரில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.  

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தின் கீழ் ரூ.5 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளான 1200 மீ தூரத்திற்கு நடைபாதை, 750 மீ தூரத்தில் தார் சாலை, 75 மின் விளக்குகள், 75 இருக்கைகள் மற்றும் ரூ.2 கோடி மதிப்பில் திறந்த வெளி ஸ்கேட்டிங் தளம் ஆகியவற்றை தமிழ்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், மார்ச் 8ம் நாள் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டதையடுத்து, மார்ச் 25ம் தேதி வரை பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி தஞ்சாவூர் சத்யா விளையாட்டு அரங்கில் கல்லூரி பெண்களுக்கான மாவட்ட அளவில் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில், இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் டேவிட் டேனியல் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள குந்தவை நாச்சியார், பான் செக்கர்ஸ், கும்பகோணம் அன்னை கல்லூரி, ஈச்சங்கோட்டை அரசு வேளாண் கல்லூரி, மன்னர் சரபோஜி கலைக் கல்லூரி, உள்ளிட்ட 10 கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்... ஆத்திரத்தில் மிளகாய்பொடி கலந்த கொதிக்கும் நீரை ஊற்றி கணவரை கொன்ற மனைவி!

தொடர்ந்து 3 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், முதல் பரிசை பேராவூரணி மகளிர் அணியும், 2ம் பரிசை கும்பகோணம் அன்னை கல்லூரியும், 3ம் பரிசை கும்பகோணம் இதயா கல்லூரியும், 4ம் பரிசை கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி அணியும் பெற்றன. இந்த போட்டியில் மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அலுவலர் டேவிட் டேனியல் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Thanjavur