முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை ஈ.பி காலனியிலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு மினி பஸ் இயக்கப்படுமா? கடும் அவதியடையும் பொதுமக்கள்..! 

தஞ்சை ஈ.பி காலனியிலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு மினி பஸ் இயக்கப்படுமா? கடும் அவதியடையும் பொதுமக்கள்..! 

X
தஞ்சை

தஞ்சை ஈ.பி காலனியிலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு மினி பஸ் இயக்கப்படுமா?

Thanjavur Mini Bus Issue : தஞ்சை ஈ.பி காலனி வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு மினி பேருந்து இயக்கப்படாததால் பொதுமக்கள் 10  கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம் நிலை ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை பழைய பஸ் நிலையத்தி லிருந்து நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனி, கல்யாண சுந்தரம் நகர், தேவன் நகர், ஜெய லட்சுமி நகர், மாதா நகர், வங்கி ஊழியர் காலனி வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு ஒரு மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது.

இந்த சிற்றுந்து கொரோனா காலக்கட்டத்திலிருந்து நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பகுதியில் வசிக்கும் பொது மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், புதிய பஸ் நிலையம் பகுதிக்கு செல்லும் தொழிலாளர்கள், அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.

தஞ்சை ஈ.பி காலனியிலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு மினி பஸ் இயக்கப்படுமா?

மேலும் ஷேர் ஆட்டோக்களும் இப்பகுதி வழியே செல்வதில்லை. இபி காலனியில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல சுமார் நான்கு கிலோ மீட்டரே ஆகும். ஆனால் தற்போது போக்குவரத்து வசதி இல்லாததால் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு மற்றொரு பஸ் படித்துவிட்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வருகிறது இதனால் சுமார் 10 கிலோ மீட்டரை பொதுமக்கள் சுற்றி வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து நாஞ்சிக்கோட்டைசாலை ஈ.பி.காலனி வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Thanjavur