ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது நிறைவு பெறும்? - மேயர் சண் ராமநாதன் அப்டேட்

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது நிறைவு பெறும்? - மேயர் சண் ராமநாதன் அப்டேட்

தஞ்சையில்

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்

Thanjavur Smart City Project | ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை டிசம்பரில் முடிக்க உள்ளதாக தஞ்சை மேயர் சன் ராமநாதன் தெரிவித்துள்ளார்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சையில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 2022 டிசம்பர் மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நிறைவடையும் என தஞ்சாவூர் மேயர் சன் ராமநாதன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தஞ்சை மாநகராட்சியின் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது..

தஞ்சாவூர் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 2023, மார்ச் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, இப்பணிகளை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தஞ்சாவூர் மாநகரில் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் முடித்து, செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க:  தஞ்சாவூர் மாவட்டத்தில் மறக்காமல் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்.!

சிவகங்கை பூங்கா

ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் திட்டம் இரு மாதங்களில் முடிக்கப்பட்டு விடும். சிவகங்கை பூங்காவில் புனரமைப்பு பணி நிறைவடையும் நிலையில் உள்ளதால், இரு மாதங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரில் போக்குவரத்து சிக்னல் பிரச்னை தொடர்பாக இரு நாட்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும்.

சிசிடிவி கண்காணிப்பு:

மாநகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி அலுவலக மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்.

மேலும் படிக்க:  திமுகவினரை அசர வைத்த திருவையாறு அல்வா.!

மேலும் தஞ்சையின் பழைய நகர பகுதியான 25வது வார்டுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வசதி கிடைக்கவுள்ளதாகவும், இதில் பஸ் ஸ்டாண்ட் புதிதாக கட்டப்பட்டது. மேலும் திருவையாறு பஸ் ஸ்டாண்டாக இருந்த இடம் வணிக வளாகமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பழைய மாநகராட்சி தியேட்டர் இடிக்கப்பட்டு வணிக வளாகமாக கட்டும் பணி நடந்து வருகிறது. சாலைகள் மேம்பாடு உட்பட பல்வேறு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது” என்று கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur