ஹோம் /தஞ்சாவூர் /

இப்படியெல்லாம் கட்டாயப்படுத்த கூடாது..! - தஞ்சாவூர் விவசாயிகள் கோரிக்கை..!

இப்படியெல்லாம் கட்டாயப்படுத்த கூடாது..! - தஞ்சாவூர் விவசாயிகள் கோரிக்கை..!

மாதி்ரி படம்

மாதி்ரி படம்

Tanjore District Farmers | உரம் வாங்கும் விவசாயிகளிடம் இடுபொருட்கள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என தஞ்சாவூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பேராவூரணி - சேதுபாவாசத்திரம் ஒருங்கிணைந்த ஒன்றியக்குழு கூட்டம் சேதுபாவாசத்திரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், பேராவூரணி ஒன்றியத் தலைவர் பாலசந்தர், ஒன்றியச் செயலாளர் பின்னவாசல் சிதம்பரம் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய பணிகளுக்கு யூரியா உள்ளிட்ட உரங்களை தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். உரம் வாங்கும் விவசாயிகளிடம் இடுபொருட்கள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது.

தனியார் உரக்கடைகளில் உரங்கள் விலையை உயர்த்தியும், வேறு இடுபொருட்கள் வாங்கினால் தான் உரம் தருவோம் என்று நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர், வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க : 247 தமிழ் எழுத்துக்களால் சிவனுக்கு எழுப்பிய தஞ்சை பெரிய கோவில்..! ஆச்சரியப்படவைக்கும் ராஜராஜ சோழனின் தமிழ் பற்று..! 

தள்ளுபடி தொகை ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கரும்பு கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடி தொகையை சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஒப்புக்கொண்டபடி நவம்பர் 29ம் தேதிக்குள் விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

பாங்கராங்கொல்லை - பினவாசல் இணைப்பில் ஆதனூர் அணைக்கட்டு பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும். அதேபோல், மணக்காடு காட்டாறு வடக்கு கரை சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாக பராமரிப்பின்றி. உள்ளது எனவே, அந்த சாலையை செப்பனிட்டுத் தர வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த இரு சாலைகளையும் 400 ஏக்கர் பாசன நிலப்பரப்புக்கான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Published by:Karthi K
First published:

Tags: Farmers, Local News, Tanjore